கணிதம்
உறவுகளும் சார்புகளும்
ஜெர்மன் கணிதமேதை காட்ஃபிரிட் வில்லெல்ம் லீபிநிட்ஸ் கணிதம், மருத்துவம், உயிரியல் உள்ளிட்ட 26 துறைகளில் பங்களித்தார். ‘சார்பு’ எனும் சொல்லை அவர்தான் அறிமுகப்படுத்தினார்.
எண்களும் தொடர்களும்
ஈரோட்டில் பிறந்த மாபெரும் இந்தியக் கணித மேதை ஶ்ரீநிவாச இராமானுஜன் ஆயிரக்கணக்கான சூத்திரங்களைத் தருவித்தார். G.H. ஹார்டியுடன் இணைந்து பல ஆய்வுகளை மேற்கொண்டு Royal Society உறுப்பினராக ஆனார்.
இயற்கணிதம்
மூன்று மாறிகளில் அமைந்த ஒரே நேரியல் சமன்பாடுகள், பல்லுறுப்புக்கோவைகளின் மீப்பெரு பொது வகுத்தி மற்றும் மீச்சிறு பொது மடங்கு, விகிதமுறு கோவைகள், பல்லுறுப்புக்கோவைகளின் வர்க்கமூலம், இருபடிச் சமன்பாடுகள், மாறுபாட்டின் வரைபடங்கள், இருபடிச் சார்பு …
வடிவியல்
ஒத்த முக்கோணங்கள், தேல்ஸ் தேற்றம், கோண இருசமவெட்டித் தேற்றம், பித்தாகரஸ் தேற்றம், வட்டங்கள் மற்றும் தொடுகோடுகள், இணைவுத் தேற்றங்கள் ஆகியவற்றையும் அவற்றின் பயன்பாடுகளையும் விளக்குகிறது.
ஆயத்தொலைவு வடிவியல்
ஆயத்தொலைவு வடிவியல் மூலம் முக்கோணம் மற்றும் நாற்கரத்தின் பரப்பளவு, கோட்டின் சாய்வு மற்றும் சாய்வுக்கோணம், நேர்க்கோடு மற்றும் அதன் பொதுவான சமன்பாடு ஆகியவற்றைப் பற்றி விளக்குகிறது.
முக்கோணவியல்
பிரஞ்சு கணித மேதை பிரான்கோயிஸ் வியட்டா முக்கோணவியலைப் பயன்படுத்தி இயற்கணிதச் சமன்பாடுகளைத் தீர்த்தார். கணிதத்தில் ‘கெழு’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவரும் இவரே.
அளவியல்
எகிப்தில் அலெக்ஸ்சாண்ட்ரியாவில் பிறந்த பாப்பஸ் ஒரு சிறந்த கிரேக்க வடிவியல் மேதை. நேர்வட்ட உருளை, கூம்பு போன்ற திண்ம வடிவங்களை விளக்கும் ‘மசனகோத்’ எனும் எட்டுப் புத்தகத் தொகுப்பே இவரது சிறப்பான படைப்பாகும்.
புள்ளியியலும் நிகழ்தகவியலும்
கொல்கத்தாவில் பிறந்த பிரசந்த சந்திர மகலெனோபிஸ் இரு தரவுத் தொகுப்புகளுக்கிடையேயான ஒப்புமை அளவீட்டை உருவாக்கிய இந்தியப் புள்ளியியலார். ‘இந்தியப் புள்ளியியலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார்.