குடிமையியல் அலகு 4: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை#
கற்றலின் நோக்கங்கள்#
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகளை அறிந்துகொள்ளுதல்
அணிசேரா இயக்கத்தின் பொருள் மற்றும் முக்கியத்துவத்தை விளக்குதல்
நமது வெளியுறவுக் கொள்கையின்படி நிலைகளை ஆய்ந்தறிதல்
வெளியுறவுக் கொள்கையின் முக்கியத்துவத்தை விளக்குதல்
உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை அறிதல்
அறிமுகம்#
வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு வெளியுறவு விவகாரங்களின் மூலம் தேசிய நலனைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இருதரப்பு மற்றும் பலதரப்பு உறவுகளைப் பேணவும் வடிவமைக்கப்பட்ட கொள்கை ஆகும். இது நாட்டு மக்களின் சிறந்த நலன்கள், நாட்டின் பரப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்க முயல்கிறது. வெளியுறவுக் கொள்கை என்பது நாட்டின் பாரம்பரிய மதிப்புகள், ஒட்டுமொத்த தேசியக் கொள்கை, எதிர்பார்ப்பு மற்றும் சுய கருத்து ஆகியவற்றின் நேரடி பிரதிபலிப்பாகும். நாடுகள். சர்வதேச உறவுகளில் ஒன்றையொன்று சார்ந்திருப்பது தவிர்க்கஇயலாததாகும். வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்: உடன்படிக்கைகள், நிருவாக ஒப்பந்தங்கள், தூதுவர்களை நியமித்தல், வெளிநாட்டு உதவி, வெளியுறவு அமைச்சகம் எனப்படும் இந்திய வெளிவிவகார அமைச்சரவைஇந்திய அரசின் ஒரு அங்கமாக இருந்து நாட்டின் வெளியுறவுகளைப் பொறுப்பேற்று நடத்துகிறது. 1986ஆம் ஆண்டு புது டெல்லியில் நிறுவப்பட்ட இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் இந்திய வெளியுறவுச் சேவை அதிகாரிகளுக்கு (IFS) பயிற்சி அளிக்கிறது.


சர்வதேச வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் ஆகியவைகள் ஆகும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 சட்டப்பிரிவு 51#
அரசு நெறிமுறையுறுத்தும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அரசு முயற்சி செய்ய வேண்டியவைகள்:
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்
நாடுகளிடையேநியாயமான மற்றும் கௌரவமான உறவுகளைப் பேணுதல்
சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அமைப்புகளை மதித்தல்
சர்வதேசப் பிரச்சனைகளை நடுவர் மன்றம் மூலம் தீர்க்க ஊக்குவித்தல்
4.1 நமது வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்#
தேசியப் பாதுகாப்பு
தேசிய வளமை
நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
உலக அமைதி அடைதல் மற்றும் ஒவ்வொரு
நாட்டுடனும் அமைதியுடன் சேர்ந்திருத்தல்#
- பொருளாதார வளர்ச்சி
4.2 பஞ்சசீலம்#
(சமஸ்கிருதச் சொற்களான பாஞ்ச் = ஐந்து, சீலம் = நற்பண்புகள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது)
இந்தியா (பிரதமர் - ஜவகர்லால் நேரு) மற்றும் சீனா (பிரதமர் - சூ-ெயன்-லாய்) ஆகிய நாடுகளுக்கிடையேஅமைதியுடன் இணங்கியிருத்தலுக்கான 5 கொள்கைகள் (பஞ்சசீலம்), 1954 ஏப்ரல் மாதம் 28ஆம் நாள் கையெழுத்தானது. இரு அரசாங்கங்களும் பின்வரும் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பந்த்ததை ஏற்படுத்திக் கொண்டன.

ஒெவா நா எைலைய இைறயாைமைய பரபர மத#
பரபர ஆரைம#
பரபர உநா வகாரக தைலடாத#
பரபர நலகாக சமவ ம ஒைழத#
அைமயாக ேசத#
இந்தக் கொள்கைகள் இந்தோனேசியாவில் 1955ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க- ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
4.3 வெளியுறவுக் கொள்கையினை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள்#
நாட்டின் புவியியல் அமைப்பு மற்றும் பரப்பளவு
நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் த்துவம்.
இயற்கை வளங்கள்
பொருளாதார வளர்ச்சியின் அவசியம்
அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு
அமைதிக்கான அவசியம், ஆயுதக் குறைப்பு,
அணு ஆயுதப் பெருக்கத்தடை#
இராணுவ வலிமை
சர்வதேச சூழ்நிலை
1950 மற்றும் 1960களில் வெளியுறவுக் கொள்கைகள்நாடு சுதந்திரம் அடைந்தது முதல் 1950 மற்றும் 1960களில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள், நாட்டின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு அவர்களின் வழிகாட்டுதலின்படி முக்கியக் குறிக்கோள்களைக் கொண்டதாக அமைந்திருந்தன. நீண்டகாலமாக காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம்பெற்ற நாடுகள் பொருளாதார மேம்பாடு தொடர்பாக் கடுமையான சூழ்நிலையை எதிர்கொண்டன. எனவே, சோவியத் சோஷலிச குடியரசுகளின் ஒன்றியம் (USSR) அல்லது அமெரிக்க ஐக்கிய நாடுகள் (USA) ஆகியவற்றின் ஏதேனும் ஒரு முகாம்களில் சேர்வது அவசியமாயிற்று. நாட்டின் முதல் பிரதமரான நேரு, அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா ஆகிய வல்லரசு நாடுகள் ஆப்பிரிக்கா, ஆசியாவில் புதிதாகத் தோன்றிய நாடுகளில் தங்களது செல்வாக்கைச் செலுத்துவதை எதிர்த்தார். எனவே, பனிப்போர் நிலவும் இரு துருவ உலகமான அமெரிக்கா மற்றும் சோவியத் ரஷ்யா வல்லரசுகளுடன் சேராமல் அணிசேரா இயக்கம் என்ற வழியைத் தேர்ந்தெடுத்ததோடு சர்வதேச விவகாரங்களில் மூன்றாவது அணியை உருவாக்க முயன்றார்.
”பரந்த அளவில் அணிசேராமை என்பது இராணுவக் கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல. அதாவது பிரச்சனைகளை முடிந்தவரை இராணுவக் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடனும் நட்பு ரீதியிலான உறவைப் பராமரித்தல்”
– ஜவகர்லால் நேரு
4.4 அணிசேரா இயக்கம் (The Non Aligned Movement) 1961#
‘அணிசேரா இயக்கம்’ என்ற சொல் 1953இல் ஐ.நா. சபையில் உரையாற்றிய வி.கே. கிருஷ்ணமேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது. அணிசேராமை என்பது இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமாக விளங்குகிறது. இதன் நோக்கம் இராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தலாகும். அணிசேரா இயக்கமானது 120 உறுப்பு நாடுகளையும் 17 நாடுகளைப் பார்வையாளராகவும் 10 சர்வதேச நிறுவனங்களையும் கொண்டுள்து. இது ஒரு அரசியல் இயக்கத்திலிருந்து பொருளாதார இயக்கமாக மாற்றம் கொண்டுள்து.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள்: இந்தியாவின் ஜவகர்லால் நேரு, யுகோஸ்லாவியாவின் டிட்டோ , எகிப்தின் நாசர், இந்தோனேசியாவின் சுகர்னோ மற்றும் கானாவின் குவாமே நிக்ரூமா.
பனிப்போர் காலத்தில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை#
இந்தியா அணிசேரா இயக்கத்தில் இருந்த போதும் சோவியத் யூனியனுடன் 1971ஆம் ஆண்டில் இந்திய - சோவியத் ஒப்பந்த்தின் (20 ஆண்டு கால ஒப்பந்தமான அமைதி, நட்புறவு மற்றும் ஒத்துழைப்பு) மூலம் இணைந்தது. பின்னர் இந்தியா இராணுவ நவீனமயமாக்கலை மேற்கொண்டது. சீனா 1964ஆம் ஆண்டு லாப் நார் (Lop Nor) என்னுமிடத்தில் மேற்கொண்ட அணு சோதனைக்குப் பதிலடியாக இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணு சோதனைத் திட்டத்தினை 1974இல் பொக்ரானில் நடத்தியது. (நிலத்தடி அணு வெடிப்புத் திட்டம் / Subterranean Nuclear Explosions Project).

முதல் அணு சோதனை-பொக்ரான் (ராஜஸ்தான்)
மாறிவரும் உலகச் சூழ்நிலைகள் வெளியுறவுக் கொள்கை விவரங்களைத் தீர்மானிக்கின்றன. பேரழிவைஏற்படுத்திய இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் இந்தியா அரசியல் விடுதலை பெற்றது. மேலும், தீவிர வறுமை, எழுத்தறிவின்மை, குழப்பமான சமூக-பொருளாதார நிலைகளிலிருந்து இந்தியா தன்னை மீட்டெடுக்க வேண்டியிருந்தது. இதனால் நமது புதிய நாடு இராணுவக் கூட்டு மற்றும் ஒப்பந்த்தில் ஈடுபட இயலவில்லை. இராணுவக் கூட்டினைத் தவிர்ப்பது என்பது அப்போது ஒரு விருப்பமாக மட்டுமின்றி ஒரு தேவையாகவும் இருந்தது. தற்போது அணிசேராமை என்பது நடுநிலைமையாக இருப்பது என்பது பொருள் அல்ல; பிரச்சனைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரமாகத் தீர்மானிப்பதாகும். அணிசேராமை என்பதற்கு இராணுவ வலிமை இல்லாமல் இருப்பது என்று பொருள் அல்ல. அது மோதல்கள் அல்லது பதட்டங்களைக் குறைப்பதை உறுதிசெய்வது எனப் பொருள்படுவதாகும்.
கூட்டுசேராமையை விலக்கினாலும் கூட இந்தியா அதிக அளவில் தனது இராணுவ அமைப்பைப் பலப்படுத்தவும் ஒரு அணுசக்தி நாடாகவும் ஆகமுடிந்தது. வெளியுறவுக் கொள்கைகளை நிர்வகிப்பதில் ஏற்படும் குறைகளும் தவறுகளும் அவ்வப்போது சரி செய்யப்பட்டாலும் இந்தியாவின் அடிப்படைக் கொள்கையான அணிசேராமை இன்னும் நடைமுறையில் உள்ளது.
புதிய மாற்றங்கள்-1990 மற்றும் இருபதாம் நூற்றாண்டு#
1990களில் சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் மேற்கத்திய நாடுகளின் ஆதரவோடு ஒரு புதிய உலகளாவிய பொருளாதாரக் கொள்கை (தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல்) எழுச்சி பெற்றது. இந்தியா உலகப் பொருளாதார மன்றத்துடன் (GATT) ஓர் ஒப்பந்த்தில் சேர்ந்ததோடு இருதரப்பு, முத்தரப்பு, பலதரப்பு ஒப்பந்தங்களிலும் இணைந்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுதச் சோதனைகள் மேற்கத்திய நாடுகளில் இருந்து அச்சுறுத்தும் எதிர் விளைவுகளை ஏற்படுத்தின.
இந்திய வெளியுறவுக் கொள்கை பின்வரும் பல்வேறு வகைகளில் மாற்றம் கொண்டது.
சீனாவுடனான நட்புறவு - கிழக்கு நோக்கிய கொள்கை (1992)
ராஜஸ்தானில் உள்ள பொக்ரானில் நடைபெற்ற இரண்டாவது அணு சோதனை (1998)
இஸ்ரேலிடமிருந்து பாதுகாப்புத் தளவாடங்களைக் கொள்முதல் செய்தலுக்கான உறவு
அரபு நாடுகள் மற்றும் ஈரானுடன் எரிசக்தி
ஆற்றல் வள தூதரக உறவு#
அமெரிக்காவின் அணு ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளுதல்
சர்வதேச அணுசக்தி நிறுவனத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியாவின் வாக்களிப்பு 21ஆம் நூற்றாண்டில் மீண்டெழும் இந்தியா இந்திய வெளியுறவுக் கொள்கையின் முதன்மையான பணி உள்நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்துவதாகும்.
உலகின் தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளுக்காக இந்தியா தனது கொள்கைகளைச் சரி செய்துள்ளது. இது நமது மூலதனங்களுக்கான உள் முதலீட்டை அதிகரித்தல், தொழில்நுட்ப யோசனை, வளர்ச்சிக்கான கருத்துகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உலகின் முன்னணி பொருளாதாரங்களுள் ஒன்றாக மறுவெழுச்சி அடைதல் ஆகியவற்றிற்கேற்ப வடிவமைத்துள்ளது.
இந்தியா தற்போதைய உலகளாவிய விவகாரங்களில் ஈடுபட்டு தனது சர்வதேச கொள்கைகள் முக்கிய இடத்தைப் பெற முனைவதோடு உலக அளவில் தனது இருப்பை உணரச்செய்கிறது. இந்தியா G-20, IBSA, BRICS போன்ற புதிய உலகக் குழுக்களில் அங்கம் வகிப்பதுன் மூலம் உலகளாவிய விவகாரங்களில் தனது பங்களிப்பை அதிகப்படுத்தப்படுகிறது .
உலகப் பாதுகாப்புக் குறித்த அக்கறை இந்தியாவின் இராணுவ நவீனமயமாக்கல், கடல்சார் பாதுகாப்பு மற்றும் அணுசக்திக் கொள்கைகளில் பிரதிபலிக்கின்றன.
இந்தியா உலகளவில் முடிவெடுப்பதிலும் நிருவாகத்தில் ஒரு முக்கியக் குரலாகவும் வளர்ந்து உலகளாவிய கட்டமைப்பில் ஒரு பாலமாகவும் சமநிலைப்படுத்தும் மிகப்பெரிய சக்தியாகவும் உருவெடுத்துள்ளது. இந்தியா மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர் கொண்டாலும் பொருளாதாரம், அரசியல் மற்றும் போர்த்திறன் சார்ந்த துறைகளில் கொள்கை வகுப்பாளர்களின் முடிவுகள் இந்தியாவை வலிமை வாய்ந்த சக்தியாக உருக்கொள்ளச் செய்துள்ளன. இத்தகைய சவால்கள் பொருளாதார வளர்ச்சியை நீட்டிக்கச் செய்தல், வளம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் போன்றவைகளிலும் இராணுவத்தன்மை அல்லாத பிரச்சனைகளான காலநிலை மாற்றம், எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு, அரிதான வளங்களுக்குப் போட்டி, உணவு மற்றும் நீர் பாதுகாப்பு, தொற்று நோய்கள் மற்றும் இடம்பெயர்தல் போன்ற விவகாரங்களிலும் மிகப்பெரிய வளர்ச்சி மாற்றங்களை அடைந்துள்ளது. இந்த சவால்கள் எண்ணற்றவையாகவும் கடினமானவையாகவும் இருந்த போதிலும் அவை இந்தியாவின் கொள்கை அமைப்புகளுக்கு எட்டாதவை அல்ல.
4.5 இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துகள்#
தேசிய நலனைப் பேணுதல்
உலக அமைதியை எய்துதல்
ஆயுதக் குறைப்பு நடவடிக்கை எடுத்தல்
பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்
அமைதியான வழிகளில் பிரச்சனைகளைத்
தீர்த்தல்#
அணி சேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு
சர்வதேச விவகாரங்களில் சமத்துவம் காணுதல்
காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடுபடை வலிமை குறைப்புக் கொள்கை சுதந்திரம் அடைந்திலிருந்து உலகளவில் ஆயுதப் பெருக்கத் தடை இந்தியாவின் அணுக் கொள்கையில் மேலோங்கிய ஒரு கருத்ததாகவே இருந்து வருகிறது. இதனால் ஐ.நா.வின் படை வலிமைக் குறைப்புத் திட்டங்களுக்கு இந்தியா ஆதரவளித்தது. 1974 மற்றும் 1998இல் அணு சோதனைகள் போர்த்திறமை சார்ந்தநடவடிக்கைகளுக்காகவே செய்யப்பட்டவையாகும்.
இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துகள்:
முதலில் பயன்படுத்துவதில்லை
குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன் அணு ஆயுத்ததைப் போர்த்தாக்குதலுக்குப் பயன்படுத்துவது இல்லை என்பதோடு அணு ஆயுதமற்ற எந்த ஒரு நாட்டிற்கு எதிராகவும் பயன்படுத்துவதுமில்லை என இந்தியா தீர்மானித்துள்ளது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும்.
4.6 தெற்காசிய நாடுகளின் பிராந்தியக்#
கூட்டமைப்பு (South Asian Association for#
Regional Cooperation) (1985)#
SAARC நாடுகளின் கூட்டமைப்பு என்பது தெற்காசியாவில் அமைந்துள்ள எட்டு நாடுகளின் ஒரு பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் அமைப்பாகும். SAARC நாடுகளின் கொள்கை நோக்கமானது நலம்சார் பொருளாதாரத்தை ஊக்குவித்தல், தெற்காசிய நாடுகளிடையே கூட்டுத்தன்னிறைவு மற்றும் இப்பிராந்தியத்தில் சமூக-பண்பாட்டு மேம்பாட்டினை விரைவுபடுத்துதல் ஆகியவையாகும். SAARC அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் புதுடெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையம் தெற்காசியாவில் பேரிடர் குறைப்பு மற்றும் மேலாண்மைக்கான வல்லுனர்களைக் கொண்ட அமைப்பாகும். இஸ்ரோ (ISRO) அமைப்பு SAARC பிராந்தியத்திற்கான ”செய்தித் தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக” SAARC செயற்கைக்கோளைச் செலுத்தி உள்ளது.


சார்க் (SAARC) அமைப்பின் உறுப்பு நாடுகள்: ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம், மாலத்தீவு, பாகிஸ்தான் மற்றும் இலங்கை.
வெளியுறவுக்கொள்கை என்பது மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒரு நாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவையாகும். இராஜதந்திரம் என்பது ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவி ஆகும்.
4.7 இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் தற்காலச் சூழல் மாற்றம் மற்றும் தொடர்ச்சி#
அ. ஒருங்கிணைந்த அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை: முதலில் அண்டை நாடுகள் கொள்கை#
வரலாறு மற்றும் கலாச்சார ஒற்றுமைத் தன்மைகளை மையமாகக்கொண்ட அண்டை நாடுகள் என்ற கருத்து இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையாக எப்பொழுதும் இருந்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர முன்னுரிமையை இந்தியா அளித்து வருகிறது. இந்திய வெளியுறவுக் கொள்கை இந்த அண்டை நாடுகளை மையம் கொண்டது என்பது பல்வேறு வகையான வளர்ச்சி இலக்குகளை இந்தியா அடைவதற்கு அமைதியான சுற்றுப்புறம் அவசியம் என்ற தெளிவான புரிதலை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா தனது அண்டை நாடுகளுக்குத் தேவைப்படும் ஆதரவினை வளஆதாரங்கள், கருவிகள் மற்றும் பயிற்சியாக அளித்து வருகிறது. பொருள்கள், மக்கள், ஆற்றல், மூலதனம் மற்றும் தகவல்கள் எளிதாகச் செல்வதை மேம்படுத்துவதற்காக மிகப்பெரிய இணைப்பும் ஒருங்கிணைப்பும் அளிக்கப்படுகிறது.
ஆ. அரசதந்திரம் மற்றும் வளர்ச்சியை இணைத்தல்#
இந்தியாவின் உள்நாட்டு முக்கிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குச் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறுவது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நோக்கங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தொழில்நுட்ப உதவி கிடைப்பதை மேம்படுத்துதல், மூலதனத்தைப் பெறுதல், சந்தையினைப் பெறுதல் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இ. “கிழக்கே நோக்கு” என்பதிலிருந்து “கிழக்குச்#
செயல்பாடு” என்ற கொள்கைக்குப் படிப்படியான மாற்றம்#
வடகிழக்கு இந்தியாவிலிருந்து, தென்கிழக்கு ஆசியா தொடங்குகிறது. இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் (ASEAN) பாலமாக மியான்மர் உள்ளது. இதன் நோக்கம் ஆசியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருப்பதோடு, இந்தோ - பசிபிக் பகுதியில் நிலையான மற்றும் பல்முனை சமநிலையை உறுதிப்படுத்துவதாகும். இக்கொள்கை ஆசியா மற்றும் கிழக்காசிய நாடுகளிடையேஆக்கபூர்வமான பங்கினை வலியுறுத்துகிறது. நமது கிழக்குக் கொள்கையின் மூன்று முக்கியக்கூறுகள்: வலிமையான நிலப்பரப்பு இணைப்பு, வணிகம் மற்றும் பாதுகாப்பு தொடர்பானவை ஆகியனவாகும்.
ஈ. பொருளாதார வளர்ச்சி#
தற்போது இந்தியாவின் அரசியல் நகர்வுகளில் தவிர்க்கவியலாத பொருளாதாரக் காரணிகள் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சிறந்த நட்புறவைக் கொள்ள விழைகின்றன. விரைவான , சமமான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி இந்தியாவின் முதன்மைக் குறிக்கோளாகஉள்ளது. நாடு சர்வதேச பங்களிப்பை மேம்படுத்துவதன் மூலம் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கிறது. இதனை அடைவதற்குத் தேவையானவைபொருளாதார வளர்ச்சி, சந்தை, மூலதனம், தொழில்நுட்பம், மரபுப்பிணைப்பு, பணியாளர்திறன், நியாயமான உலகளாவிய நிருவாகம் மற்றும் ஒரு நிலையான நியாயமான வளர்ச்சிக்கு உகந்த சூழல் ஆகியனவாகும்.
உள்நாட்டுக் கொள்கைக்கும் வெளியுறவுக் கொள்கைக்கும் இடையேயான வேறுபாடுகள்#
| உள்நாட்டுக் கொள்கை | வெளியுறவுக் கொள்கை |
|---|---|
| உள்நாட்டுக் கொள்கை என்பது ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளான விவகாரங்கள் தொடர்பாக் கொண்டுள்ள கொள்கையாகும். இது உள்விவகாரங்கள், சமூக நலம், சுகாதாரம், கல்வி, குடியியல் உரிமைகள், பொருளாதார விவகாரங்கள் மற்றும் சமூகப் பிரச்சனைகள் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சட்டங்களை உள்ளடக்கியது. | வெளியுறவுக் கொள்கை என்பது ஒரு நாடு பிற நாடுகளுடன் கொண்டுள்விவகாரங்கள் தொடர்பானதாகும். வணிகம், இராஜ தந்திரம், தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்பு, உளவுத் துறை மற்றும் உலகளாவிய சூழல் ஆகிய வகைகளைக் கொண்டதாகும். |
உ. வழிகாட்டும் சக்தியாக இந்தியா#
ஜி-20 நாடுகள், கிழக்காசிய உச்சிமாநாடு, பிரிக்ஸ் (BRICS) ஆகியவற்றில் உறுப்புநாடாக இந்தியா இருப்பதும் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட ஒரு நாடாக இருப்பதும் அதன் நிலைக்கு ஒரு சான்றாகும். ஐ.நா. சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு நிரந்தர உறுப்பு நாடாக இருக்க இந்தியா விரும்புகிறது. இந்தியா தற்போது தனது அதிகரித்துவரும் நலனை உலகின் பல பகுதிகளில் ஆழப்பதித்து வருகிறது. மேலும் ஆற்றல் வளம், முக்கிய இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், அவசியமான கப்பல் வழித்தடங்களைத் திறத்தல் மற்றும் பராமரித்தல், முதலீடுகளை எதிர்நோக்கல், கடல்கடந்த வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நுழைவினைப் பெறுதல் போன்ற பல்வேறு காரணிகளால் முன்னேற்றம் கண்டு வருகிறது.
முடிவுரை#
தற்போது இந்தியா உலகின் பெரும்பான்மையான நாடுகளுடன் தூதரக உறவுகளைக் கொண்டுள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடு,
பாடச் சுருக்கம்#
ஓர் அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையானது பிறநாடுகளை நோக்கி மேற்கொள்ளப்பட்ட கொள்கையின் முன்முயற்சிகளைப் பற்றியது ஆகும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிறைவேற்றும் பொறுப்பு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தைச் சார்ந்தது.
ஓர் இலக்கு சார்ந்த வெளியுறவுக் கொள்கையானது பிற நாடுகளுடன் மேம்பட்ட உறவினை அடைவதற்கான திறனைக் கொண்டுள்ளது.
இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு காமன்வெல்த் நாடுகளில் இணைந்து பிற நாடுகளின் சுதந்திர இயக்கத்தை வலுவாக ஆதரித்தது.
இந்தியா பனிப்போரின் போது எந்த ஒரு கூட்டணியிலும் (ரஷ்யா – அமெரிக்கா) இணைத்துக் கொள்ளாமல் அணிசேராக் கொள்கையைக் கடைபிடித்தது.
உலக வல்லரசு நாடுகளுடனும் அண்டை நாடுகளுடனும் உறவை மேம்படுத்துவதில் இந்தியா தற்போது கவனம் செலுத்துகிறது.
மிகப்பெரிய மக்களாட்சி நாடு மற்றும் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. இந்தியா எந்தவொரு மிகப்பெரிய இராணுவக் கூட்டணியில் இல்லை என்றாலும் பெரிய நாடுகளுடன் போர்த்திறன் சார்ந்தஒரு ஆழமான உறவைக் கொண்டுள்ளது. தீவிரவாத்திற்கு எதிரான நமது பொதுவான போராட்டம் என்பது குறிப்பிடத்தக்க பலமாகும். இந்தியா தனது பாதுகாப்பு மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றங்களை அடைய எதிர்பார்க்கும் அதேவேளையில் அனைத்து நாட்டு மக்களுக்கும் அமைதி, சுதந்திரம், முன்னேற்றம் மற்றும் நீதி ஆகியவற்றையும் வேண்டுகிறது. இவ்வாறு சர்வதேச விவகாரங்களில் நிரந்தர நண்பனும் இல்லை: நிரந்தர பகைவனும் இல்லை; நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வெளியுறவுக் கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. புதிய வகை சவால்கள் புதிய உண்மைகளுக்கேற்ப அமைத்துக்கொள்ள வலியுறுத்துகிறது. அப்போதும்கூட அதன் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கட்டமைப்பு மாறாமல் உள்ளது.
கலைச்சொற்கள்#
| வெளியுறவு | External affairs | matters having with international relations |
|---|---|---|
| பலதரப்பு | multilateral | involving more than two countries |
| கொள்முதல் | procurement | process of buying |
| பன்மைக்கோட்பாடு | pluralism | the practice of holding more than one benefice at a time |
| பெருங்கொள்ளை நோய் | pandamics | an epidemic disease |

பயிற்சி#
V சுருக்கமாக விடையளிக்கவும்#
வெளியுறவுக் கொள்கை என்றால் என்ன ?
பஞ்சசீலக் கொள்கைகளில் ஏதேனும் நான்கினைப் பட்டியலிடுக.
அணிசேரா இயக்கத்தின் நிறுவனத் தலைவர்கள் யாவர்?
இந்தியாவின் அணுசக்தி கொள்கையை விவரி.
சார்க் (SAARC) உறுப்பு நாடுகளைப் பட்டியலிடுக.
வேறுபடுத்துக: உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளிநாட்டுக் கொள்கை
VI விரிவாக விடையளிக்கவும்#
அணிசேரா இயக்கம் பற்றி விரிவான குறிப்பு எழுதுக.
வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் எவை ?
VII செயல்பாடு#
- நீங்கள் முடிவு எடுப்பவராக இருந்ததால் தக்க வைத்துக்கொள்ள விரும்பும் அல்லது மாற்றம் செய்ய விரும்பும் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளில் ஏதேனும் இரண்டு அம்சங்களை அடையாளம் காணவும்.
இணையச் செயல்பாடு#

இந்தச் செயல்பாடு மூலம் உலக நாடுகளில் அமைந்துள்ள இந்தியத் தூதரகங்களின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
படி – 1 URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்குச் செல்க படி – 2 மெனுவின் வலது பக்கத்தில் உள்ள ‘Useful Links’ என்பதைச் சொடுக்கிய பின்னர்‘India Missions Abroad’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும் . படி – 3 உலக நாடுகளில் அமைந்திருக்கும் இந்தியத் தூதரக விவரங்களை அறிய தோன்றும் உலக வரைபடத்தில் ஏதாவது ஒரு நாட்டின் மீது சொடுக்கவும் (ரஷ்யா)
உரலி: https://mea.gov.in/index.htm
Dixit J.N., India’s Foreign Policy and its Neighbours, Gyan Publishing House, Delhi (2001)
Khanna V.N., and Leslie K. Kumar., Foreign Policy of India, Vikas Publishing House Pvt. Ltd., (2018), Noida
Muhkund Dubey., India’s Foreign Policy, Orient Black Swan Pvt. Ltd., New Delhi (2015)
Shah, S.k., India’s Foreign Policy (Past, Present and Ties with the world), Vij Books India Pvt. Ltd., New Delhi (2017)
இணையதள வளங்கள்#

கூடுதல் கற்றல் வளங்கள்#
இவை பாடநூலுக்கு துணையான வெளித்தள வளங்கள். மூலப் பாடநூலின் உரையும் புள்ளிவிவரங்களும் மேலே தனியாக உள்ளன.
இணைப்புகள் சோதிக்கப்பட்ட நாட்கள்: 12–13 அக்டோபர் 2026. காணொலிகளின் தலைப்பும் வெளியீட்டாளரும் தேடல் பதிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டன; காணொலி இயக்கம் முழுமையாகச் சோதிக்கப்படவில்லை. வெளித்தளப் பயிற்சிகளின் விடைகள் பாடநூலின் அதிகாரப்பூர்வ விடைகளாகக் கருதப்படவில்லை.
காணொலிகள்#
- Class 10 | இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை | Kalvi TV — KalviTVOfficial; தமிழ்.
- India’s Foreign Policy — short answers 1–4 — Tamil — HTAS How To Approach Schooling; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- India’s Foreign Policy — detailed answers — Tamil — HTAS How To Approach Schooling; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- Cold War and Non-Aligned Movement — Tamil — John Victor IAS teacher; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- SAARC — South Asian Association for Regional Cooperation — Tamil — Tamil Geography News; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
- Foreign Policy — Objectives of Indian Foreign Policy in Tamil — Yogesh Exams; தமிழ். சில துணைத்தலைப்புகளை மட்டும் உள்ளடக்கும் கூடுதல் வளம்.
இணையச் செயல்பாடுகள்#
- Asia countries — map quiz — Seterra / GeoGuessr; ஆங்கிலம்.
தலைப்புவாரியான வளங்கள்#
“பாடக் காணொலி” மற்றும் “பாடப் பயிற்சி” முழுப் பாடத்துக்கான வளங்கள். “காணொலி தேடல்” தனித்தலைப்புக்கான தேடல் இணைப்பு; குறிப்பிட்ட காணொலி உறுதிப்படுத்தப்பட்டதாக அது குறிக்காது.
முந்தைய உரலிகளின் சோதனை#
| முந்தைய உரலி | சோதனை நிலை | மாற்று வளம் |
|---|---|---|
https://mea.gov.in/index.htm | இணைப்பு திறக்கிறது | மாற்று இணைப்பு |
https://www.mea.gov.in/ | அணுகல் உறுதிப்படுத்தப்படவில்லை | மாற்று இணைப்பு |
https://mnoal.org/ | அணுகல் உறுதிப்படுத்தப்படவில்லை | — |
http://www.saarc-sec.org/ | இணைப்பு திறக்கிறது | மாற்று இணைப்பு |
அரசு பொதுத்தேர்வு வினாக்கள் (Board Examination Questions)#
2 மதிப்பெண் வினாக்கள் (2 Marks)#
2025#
அணிசேரா இயக்கத்தை உருவாக்கிய முக்கிய தலைவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
மாதிரி விடை மற்றும் தீர்வு
அணிசேரா இயக்கத்தின் (NAM) சிற்பிகள்
- ஜவஹர்லால் நேரு - இந்தியாவின் பிரதமர்
- டிட்டோ (ஜோசிப் புரோஸ் டிட்டோ) - யூகோஸ்லாவியாவின் அதிபர்
- நாசர் (கமால் அப்தெல் நாசர்) - எகிப்தின் அதிபர்
- சுகர்ணோ - இந்தோனேசியாவின் அதிபர்
- குவாமே நிக்ரூமா - கானாவின் அதிபர் (1961 பெல்கிரேட் மாநாட்டில் முறைப்படி தொடங்கப்பட்டது).
5 மதிப்பெண் வினாக்கள் (5 Marks)#
2024#
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகளை விவாதிக்கவும்.
மாதிரி விடை மற்றும் தீர்வு
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள்
- புவியியல் அமைப்பு: இந்தியாவின் பரந்த கடற்கரை, இந்தியப் பெருங்கடலில் மைய அமைவிடம் மற்றும் அண்டை நாடுகளுடனான நில எல்லைகள்.
- வரலாற்று மற்றும் கலாச்சாரப் பாரம்பரியம்: அகிம்சை, அமைதி, மனிதநேயம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட பழமையான கலாச்சார விழுமியங்கள்.
- தேசிய பாதுகாப்பு: நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை எல்லைப்புற அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்தல்.
- பொருளாதார வளர்ச்சி: வறுமையை ஒழிக்கவும், தொழில் மற்றும் வேளாண்மையை நவீனப்படுத்தவும் வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் வர்த்தக உறவுகளின் தேவை.
- சர்வதேச அரசியல் சூழல்: பனிப்போர் காலத்து அதிகாரப் போட்டியில் சிக்காமல் சுதந்திரமாகச் செயல்பட வழிவகுத்த அணிசேராக் கொள்கை (NAM).