பொருளியல் அலகு 5: தமிழ்நாட்டில் தொழில்துறை தொகுப்புகள்#

    கற்றலின் நோக்கங்கள்#

    தமிழ்நாட்டின் தொழில்துறை தொகுப்புகள் முன்னேற்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளுதல் தமிழ்நாடு அரசின் கொள்கைகள் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அறிந்துகொள்ளுதல்அரசின் கொள்கைகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்ளுதல்தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி அறிந்துகொள்ளுதல்

    அறிமுகம்#

    பொதுவாக மூலப்பொருள்களை எளிதில் பயன்படுத்தக்கூடிய பொருள்களாக மாற்றுவதில் ஈடுபட்டுள்ள எந்த ஒரு மனித நடவடிக்கையையும் நிறைவேற்றுமிடம் “தொழிற்சாலை” என்று அழைக்கப்படுகிறது. நுகர்வோருக்கும் மற்ற உற்பத்தியாளர்களுக்கும் தேவைப்படும் பொருள்களை நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திப் பெருமளவில் உற்பத்தி செய்வது தொழில்மயமாதல் எனப்படும். தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் தன்மை, தொழில் தொகுப்புகளின் முக்கியத்துவம், தமிழ்நாட்டில் தொழில் தொகுப்புகள் எவ்வாறு முன்னேறின, தொழில்களை மேம்படுத்துவதில் அரசு எடுக்கும் முயற்சிகள் மற்றும் அதன் பங்கினைப் பற்றி இப்பாடப்பகுதியில் நாம் அறிந்து கொள்வோம்.

    5.1 தொழில்மயமாதலின் முக்கியத்துவம்#

    தொழிற்சாலைகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் முன் நாம் ஏன் வேளாண்மை வளர்ச்சியுடன் அதன் பொருளாதார வருவாய் மற்றும் வேலை வாய்ப்பு குறைகிறது என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும். முதலாவதாக உணவுத் தேவையுடன் வருமானத் தேவையும் நிலையானதாக உள்ளது. எனவே , ஒரு நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து, வருமானம் அதிகரிக்கும் பொது நுகர்வோர் வேளாண்மை உற்பத்திப்

    பொருள்களுக்கு தங்கள் வருமானத்தில் ஒரு சிறு பகுதியை மட்டும் செலவிடுகிறார்கள்.

    இரண்டாவதாக, நுகரப்படும் உணவும் பொருளாதார விரிவால் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. உணவுப் பொருள்கள் நீண்ட தொலைவிற்கு எடுத்துச்செல்லப்பட்டுப் பதப்படுத்தி முத்திரையிடப்படுகிறது. இதன் விளைவாக நுகர்வோர்கள் வாங்கும் விலையைவிட விவசாயிகள் பெறும் விலை குறைவாக உள்ளது.

    மூன்றாவதாக, நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித்திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக்கொள்வதில் சில வரையறைகளை பின்பற்ற நேரிடுகிறது. பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாதாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.

    இவ்வனைத்துக் காரணிகளின் விளைவாக வேளாண்துறையில் இருந்து விலகி, பொருளாதாரமானது உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்பின் அடிப்படையில் ஒரு தேவையை ஏற்படுத்துகிறது. தொழில்மயமாதல் ஒரு பொருளாதார வளர்ச்சிக்கு என்னென்ன நன்மைகளைத் தருகிறது? முதலாவதாக ஒரு பொருளாதாரத்தில் பிற உற்பத்தியாளர்களுக்குத் தேவையானஉள்ளீடுகளை உருவாக்குவது அவசியம்.

    வேளாண் உற்பத்தித்திறன் அதிகரிக்க உரங்கள் மற்றும் இயந்திரக் கலப்பைகள் (Tractors) போன்ற தொழில்களுக்கு உள்ளீடுகள் தேவைப்படுகின்றன. இரண்டாவதாக, உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் பண்டங்கள் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சந்தை நிலவுகிறது. அதே போல் வங்கி, போக்குவரத்து மற்றும் வர்த்தகம் போன்ற பணிகள் தொழிற்சாலைகளின் உற்பத்தியைச் சார்ந்ததே உள்ளன. மூன்றாவதாக, நவீன உற்பத்தி முறைகளை பயன்படுத்துவதன் மூலம் தொழில்கள் சிறந்த உற்பத்தித்திறனை அளிக்கின்றன. இதனால் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பண்டங்களின் உற்பத்தி செலவும் குறைகிறது. இதன் காரணமாக மலிவான விலையில் பண்டங்களை வாங்கிட உதவும் அதிகளவு உற்பத்தித் தேவையை உருவாக்கவும் உதவுகிறது.

    நான்காவதாக, அத்தகையப் பண்டங்களின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் தொழில்மயமாதல் வேளாண்மையில் ஈடுபடும் அதிக உழைப்பாளர் சக்தியை ஈர்க்க உதவுகிறது. எனவே , வேலைவாய்ப்பை உருவாக்குவது “தொழில் மயமாதலின்” ஒரு முக்கிய நோக்கமாகும்.

    ஐந்தாவதாக, தொழில்மயமாதலுக்கு நன்மை தருவது “தொழில்நுட்ப மாற்றமே” ஆகும். நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் தொழில்மயமாதலின் முறைகளையும் அதன் வளர்ச்சியையும் அறிந்து கொள்ள முடிகிறது. அவற்றின் விளைவாக உழைப்பாளர்களின் உற்பத்தித்திறன் அதாவது, உழைப்பாளரின் உள்ளீடு அதிகரித்தது. இதனால் தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்ட உதவுகிறது. ஆறாவதாக, வருமானம் அதிகரிப்புப் பண்டங்கள் மற்றும் பணிகளின் தேவைக்கு வழி வகுக்கிறது.

    5.2 தொழிலகங்களின் வகைகள்#

    தொழிற்சாலைகளை கீழ்க்காணும் வகைகளில் வகைப்படுத்தலாம்.

    அ. பயனர்கள்#

    முடிவுற்ற பொருள்களை இறுதி நுகர்வோர் பயன்படுத்தினால் அது “நுகர்வோர் பண்டங்கள் துறை” என்றும் வெளியீடுகள் மற்றொரு உற்பத்தியாளரால் பயன்படுத்தப்பட்டால் அது “மூலதனப் பண்டங்கள் துறை” என்றும் அழைக்கப்படுகிறது. சிமெண்ட் (Cement) மற்றும் எஃகு (Steel) போன்ற பிற தொழில்களுக்கு மூலப்பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இத்தகைய தொழில்கள் அடிப்படைப் பண்டங்கள் தொழில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

    ஆ. பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் வகை#

    வேளாண் பதப்படுத்துதல், நெசவுத்துறை, ரப்பர் உற்பத்தி, தோல் பொருள்கள் போன்ற மூலப் பொருள்களை பயன்படுத்தும் அடிப்படையில் தொழிற்சாலைகளை வகைப்படுத்துகின்றனர்.

    இ. நிறுவன உரிமையாளர்கள்#

    தொழிற்சாலைகள் தனியாருக்கு சொந்தமானதாகவும், பொது உரிமையாளர் (நடுவண் அல்லது மாநில அரசாங்கத்தால்) தனியார் மற்றும் பொதுத்துறை (கூட்டுறவாக) இரண்டிற்கும் சொந்தமானதாகவும் அல்லது கூட்டுறவுக்கு சொந்தமானதாகவும் உள்ளன.

    ஈ) அளவு#

    நிறுவனங்கள் அவற்றின் உற்பத்தி, விற்பனை, முதலீடு அல்லது வேலைவாய்ப்பு அவற்றின் அளவின் அடிப்படையில் பெரியதாகவோ, சிறியதாகவோ அல்லது நடுத்தரமாகவோ இருக்கலாம். சிறிய நிறுவனங்களை விட அளவில் சிறியதாக இருக்கும் மிகச்சிறிய நிறுவனங்களும் உள்ளன.

    சிறிய நிறுவனங்கள் இரண்டு காரணங்களால் முக்கியமானதாகக் கருதப்படுகிறன, முதலாவதாக, இது பெரிய அளவிலான துறையை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்குகிறது என்று நம்பப்படுகிறது. பெரிய நிறுவனங்களானவைமிகவும் மேம்படுத்தப்பட்ட மற்றும் தானியங்கி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் அது போதுமானஅளவு வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. இரண்டாவதாக, சிறிய அளவிலான துறை குறைந்த எண்ணிக்கையிலானசலுகை பெற்றப் பின்னணியில் இருந்து ஏராளமானதொழில் முனைவோரை வெளிப்படுத்துகிறது.

    உலகின் பல்வேறு பகுதிகளில் தொழில்மயமாதல் அனுபவங்களின் அடிப்படையில் ஒரு துறையில் நிபுணத்துவம் வாய்ந்த்த சிறிய நிறுவனங்கள் புவியியல் ரீதியாக குறிப்பிட்ட இடங்களில் குவிந்து உற்பத்தி மற்றும் கற்றலின் மூலம் பெரிய நிறுவனங்களின் திறன் இல்லாவிட்டாலும் அதற்கு ஈடு கொடுக்கும் அளவில் உள்ளதென நம்பப்படுகிறது. இத்தகைய சிறிய நிறுவனங்களின் தொகுப்புகளே “தொழில்துறை தொகுப்புகள்” என்று அழைக்கப்படுகின்றன.

    5.3 தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)#

    தொழில் தொகுப்புகள் என்பவை பொதுவானசந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளைப் பகிர்ந்துகொள்ள வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும். இங்கிலாந்தில் உலோகம் மற்றும் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட சிறிய நிறுவனங்களின் செயல்பாடுகளின் தொகுப்பினை புரிந்துகொள்ள 1920களில் புகழ்பெற்ற பொருளாதார அறிஞரானஆல்ஃபிரட் மார்ஷல் அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்த பொழுது தொழில் தொகுப்பு அல்லது மாவட்டங்களின் நன்மைகளை முதன்முதலில் கண்டறிந்தார். 1980களில் இத்தாலியில் சிறிய நிறுவனங்கள் வெற்றி பெற்ற பின்னர்தான் மார்ஷலின் “தொழில்துறை மாவட்டம்” (Industrial District) என்ற கருத்து பிரபலமாக்கப்பட்டது. இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளில் கொள்கை வகுப்போர்தங்களுடைய நாட்டில் இது போன்ற பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்பினை உணர்ந்த்தால் அவற்றினை ஊக்குவிக்கத் தொடங்கினர்.

    வெற்றிகரமான தொழில் தொகுப்புகளின் முக்கியப் பண்புகள் பின்வருமாறு: சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் புவியியல் பகுதிகளுக்கு அருகாமையில் இருத்தல். துறை சார்ந்த்த சிறப்புக் கவனம்.

    நிறுவனங்களுக்கு இடையே நெருக்கமானஅல்லது பரஸ்பர முறையில் இணைந்திருத்தல். புத்தாக்கத்தினால் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி. நம்பிக்கையை எளிதாக்கும் ஒரு சமூக கலாச்சார அடையாளம் பல்வேறு திறமையான தொழிலாளர்கள் சுய உதவிக் குழுக்கள் செயல்படுதல் வட்டார மற்றும் நகராட்சிகளுக்கு அரசின் ஆதரவு.

    போன்றவற்றால் நிறுவனங்கள் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பரமாக ஒத்துழைத்துப் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம் அவர்கள் தங்கள் திறனை விரிவுபடுத்த முடியும். போட்டியின் மூலம் அவர்கள் மிகவும் திறமையானவர்களாக மாற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.

    தொழில்தொகுப்பு எவ்வாறு தோன்றுகிறது?

    தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்தாகவும் வரலாறு கூறுகிறது. கைத்தறி நெசவுத்தொழில் வளர்ச்சி இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். சில துறைகளில், ஒரு பெரிய நிறுவனம் நிறுவப்படும்போது, அதன் உள்ளீடு மற்றும் பணிகளின் தேவைகளை கவனித்துக் கொள்வதற்காக தொழில் தொகுப்பு நிறுவனங்கள் தோன்றக்கூடும். சில நேரங்களில், ஒரு வட்டாரத்திலிருந்து மூலப்பொருள்களைப் பயன்படுத்தி உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கங்கள் முடிவு செய்யலாம், இது தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு வழிவகுக்கும்.

    5.4 தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின்#

    முன்னேற்றம் பற்றிய வரலாறு#

    தமிழ்நாட்டில் காலனித்துவ முன்காலத்தில் நெசவு, கப்பல் கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு தயாரித்தல், மட்பாண்டங்கள் தயாரித்தல் போன்ற தொழில்துறை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்கான ஏராளமானசான்றுகள் உள்ளன. தமிழ்நாடு பரந்துவிரிந்த கடற்கரையைக் கொண்டுள்ளதால், பல நூற்றாண்டுகளாக தென் கிழக்கு மற்றும் மேற்கு ஆசியாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டது. தொழிற்புரட்சிக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட இயந்திரங்களின் இறக்குமதியின் காரணமாகப் போட்டி நிலவி கைத்தறி நெசவுத்தொழில் வீழ்ச்சிக்கு காலனித்துவ கொள்கைகளும் பங்களித்தன. இருந்தபோதிலும் சில தொழில்கள் காலனித்துவக் காலத்தில் வளர்ந்தன . காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதல் காலனித்துவ காலத்தில் தொழில்மயமாதலில் இரண்டு காரணிகள் பெரும்பங்கு வகித்தன. முதலாவதாக, மேற்கு மற்றும் தெற்குத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட பருத்தி சாகுபடி அதிகளவு நெசவுத்தொழில் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தது.

    இரண்டாவதாக, இக் காலகட்டத்தில் வாணிபத்தின் வளர்ச்சியானது சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுக வட்டாரங்களின் அருகாமையில் தொழிற்சாலைகள் உருவாகக் காரணமாகவும் இருந்தது. மேலும், காலனித்துவ காலத்தில் சிவகாசியில் தீப்பெட்டி தொழிற்சாலைகள் நிறுவப்பட்டு பின்னர் பட்டாசு உற்பத்தி மற்றும் அச்சுத் தொழிலுக்கு முக்கிய மையமாக மாறியது. துறைமுகம் சார்ந்த்த தொழில்களும் இதே காலக்கட்டத்தில் இப்பகுதியின் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருந்தன. தோல் பதனிடும் தொழிலானது திண்டுக்கல், வேலூர், ஆம்பூர் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

    தமிழ்நாட்டின் மேற்குப் பகுதியில் நெசவுத் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியானது, இயந்திரங்களின் தேவையையும் அதற்கான தொழிற்சாலைகளையும் நிறுவக் காரணமாகவும் இருந்தது. இந்த நெசவுத் தொழிற்சாலைகளுக்கான இயந்திர உதிரிப்பாகங்கள், பழுது பார்த்தல் மற்றும் உற்பத்தி செய்வதற்கான சிறிய அளவிலானதொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் வளர்ச்சி அடைந்தன. 1930களில் தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நீர் மின் உற்பத்தி மற்றொரு முக்கிய தொழில் வளர்ச்சி ஆகும். நிலத்தடிநீரை உறிஞ்சுவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் இயந்திரங்களுக்கு அனுமதிக்கப்பட்ட மின்சாரம் கிடைத்தமையால், வேளாண்மைத் தொழில் விரிவடைந்ததுடன் எண்ணெய் இயந்திரங்களின் தேவையும் அதிகரித்தது. இதன் காரணமாக, இதனைச் சார்ந்த  எண்ணெய் இயந்திர உதிரிப்பாகங்கள் பழுதுபார்க்கும் தொழிற்சாலைகள் அதிக எண்ணிக்கையில் உருவாயின. இதனால் வார்ப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டு வேளாண்மை சார்ந்த்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டன.

    சுதந்திரத்திற்குப் பின் 1990களின் முற்பகுதியில்#

    தொழில்வளர்ச்சியானது சுதந்திரத்திற்குப் பிறகு நடுவண் மற்றும் மாநில அரசுகளால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பல பெரிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. சென்னையில் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் தொழிற்சாலையும் திருச்சிராப்பள்ளியில் கொதிகலன் மற்றும் விசையாழிகள் தயாரிப்பதற்காக பாரத கனரக மின்சாதன நிறுவனத்தை (Bharat Heavy Electricals Limited (BHEL) நடுவண் அரசு நிறுவியது. BHEL நிறுவனம் அதனுடைய உள்ளீட்டுப் பொருள்கள், தேவைகள் தொடர்பாக பல சிறிய நிறுவனங்களின் தொழில் தொகுப்புகளின் தோற்றத்திற்கு வழிவகை செய்தது. சென்னை புறநகரில் உள்ள ஆவடியில் போர் தளவாடங்கள் தயாரிக்கக் கனரக வாகனத் தொழிற்சாலை (Heavy Vehicle Factory - HVF) அமைக்கப்பட்டது. ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனமும் சென்னையில் வாகனங்களை உற்பத்திச் செய்யத் தொடங்கியது. அசோக் மோட்டார்ஸ் (பின்னர் அசோக் லேலண்ட்) ஸ்டாண்டர்டு மோட்டார்ஸ் இணைந்து சென்னை வட்டாரத்தில் வாகனத்தொழில்துறை தொகுப்புகள் வளர்ச்சிக்கு உதவியது. மேலும், இது வாகன உதிரிப்பாகங்களின் நகரமாக மாறியது. 1950களில் இப்பகுதியில் உள்ள பெரிய நிறுவனங்களுக்கு வாகனக் கூறுகளை வழங்குவதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்களுக்கு உதவியாக ஆவடியில் தொழில் தோட்டங்கள் நிறுவப்பட்டன. மாநிலத்தில் அதிக நீர் மின்சக்தி திட்டங்கள் மூலம் மின்மயமாதலை பரவலாக அதிகரிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு பெரும் பங்கு வகித்தது. 1973ஆம் ஆண்டில் எஃகு உற்பத்தி செய்வதற்காக சேலத்தில் இரும்பு எஃகு ஆலை அமைக்கப்பட்டது.

    1970 மற்றும் 1980களில் கோயம்புத்தூர் பகுதியில் விசைத்தறி நெசவுத் தொழில் தொகுப்புகள் அதேபோல் திருப்பூரில் பின்னலாடைத் தொழில் தொகுப்புகள் விரிவாக்கம் மற்றும் கரூரில் வீட்டு அலங்காரப் பொருள்கள் தொழில் தொகுப்புகள் இக்காலகட்டத்தில் உருவாகியது. மாநில அரசின் மூலம் பல்வேறு பகுதிகளில் தொழில்துறை தோட்டங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. மாநிலத்தில் பின்தங்கிய வட்டாரங்களில் தொழில்துறைகளை மேம்படுத்துவதற்கு இத்தகைய கொள்கை முயற்சிகளை பயன்படுத்தி வெற்றி பெறச் செய்வதற்கு ஒரு உதாரணமாக தமிழ்நாட்டில் ஓசூரில் உள்ளா விரிவாக்கப்பட்ட தொழிற் பேட்டைகளைச் சான்றாகக் கூறலாம். தமிழ்நாட்டில் தொழில்மயமாதல் - தாராளமயமாதல் கட்டம்

    1990களில் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிந்தைய காலகட்டம் தொழில்மயமாதலின் இறுதிக் கட்டம் ஆகும். இந்த சீர்திருத்தங்கள் மாநில அரசாங்கங்கள் வளங்களைத் திரட்டுவதற்கு பொறுப்பேற்கச் செய்தன. மேலும், அவை தொழில்மயமாதலுக்கு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஒருவருக்கொருவர் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மலிவான நிலம், வரிச்சலுகைகள் மானியங்கள் போன்ற சலுகைகள் முதலீட்டாளர்களை கவர்ந்திழுத்தன. வர்த்தக தாராளமயமாக்கல் மற்றும் நாணய மதிப்பிறக்கம் ஆகியவை ஏற்றுமதி சந்தைகளைத் திறக்க உதவின. இது இரண்டு பெரிய முன்னேற்றங்களுக்கு வழிவகுத்தது.

    தமிழ்நாட்டில் மிக நீண்ட காலமாக இருந்த முக்கியத் தொழில்கள் சர்க்கரை , உரங்கள், சிமெண்ட், விவசாயக் கருவிகள், இரும்பு மற்றும் எஃகு, இரசாயனங்கள், மின்மாற்றிகள், காகிதங்கள் போன்றவைகளாகும்.

    இக் காரணிகளின் விளைவாக தற்போது இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாடு அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. மேலும், உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் மிகப் பெரிய பங்கினையும் பெற்றுள்ளது. முக்கியமாக மகாராஷ்டிரா மற்றும் குஜராத் போன்ற முன்னேறிய மாநிலங்களுடன் ஒப்பிடும்போது இது அதிக உழைப்பு மிகுந்தாகும். வாகனத் தொழில்கள், தானியங்கிக் கூறுகள், இலகுரக மற்றும் கனரக பொறியியல் இயந்திரங்கள், வாகன உதிரிப்பாகங்கள் பருத்தி, ஜவுளி, ரப்பர், உணவுப் பொருள்கள், போக்குவரத்து உபகரணங்கள், இரசாயனங்கள் மற்றும் தோல் பொருள்கள் போன்றவைகள் முக்கியத் தொழில்களாகும். மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் தமிழ்நாட்டில் அனைத்துப் பகுதிகளிலும் (13 மாவட்டங்களில் 27 தொழில் தொகுப்புகள்) தொழில்துறைகள் பரவியிருக்கின்றன. மேலும், அவற்றுள் பல தொழில்கள் ஏற்றுமதி சார்ந்தவையாகும். மாநிலத்தின் சாலைகள், இரயில் போக்குவரத்து, வான்வழிப் போக்குவரத்து மற்றும் முக்கிய துறைமுகங்கள் அனைத்தும் போக்குவரத்து இணைப்பினால் நன்கு வளர்ச்சி அடைந்து காணப்படுகின்றன.

    5.5 தமிழ்நாட்டின் முக்கியத் தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்#

    வாகன தொழிற் தொகுப்புகள்#

    சென்னை பெரிய அளவிலானவாகனத் தொழில்துறை தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” (Detroit) என்று அழைக்கப்படுகிறது. சென்னை மிக அதிகமான வாகனத் தொழிலை ஒருங்கிணைக்கும் மற்றும் உதிரிபாகங்கள் செய்யும் தலைமை இடமாகத் திகழ்கிறது. சில உள்நாட்டு நிறுவனங்களான TVS, TI சைக்கிள்ஸ், அசோக் லேலண்ட் மற்றும் ஸ்டாண்டர்ட் மோட்டார்ஸ் ஆகியன இதற்கு முன்னர் இருந்தன. பொருளாதார சீர்திருத்திற்கு பின்னர் ஹூண்டாய், ஃபோர்டு, டைம்லர்பென்ஸ் மற்றும் ரெனால்ட் – நிசான் போன்ற பல பன்னாட்டு நிறுவனங்கள் (Multi National Companies - MNC) இப்பகுதியில் தொழிற்சாலைகளைத் திறந்துள்ளன. எனவே , வெளிநாடுகளிலிருந்து பல உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் உற்பத்தியாளரின் கவனங்கள் இங்கே ஈர்க்கப்பட்டுள்ளது. பல உள்நாட்டு நிறுவனங்களும் சேர்ந்து அனைத்து நிறுவனங்களுக்கான உதிரிப்பாகங்களின் உற்பத்தித் தேவையைப் பூர்த்தி செய்கின்றன.

    ஓசூர் மற்றொரு தானியங்கி தொகுப்பாகும். இங்கு TVS மற்றும் அசோக் லேலண்ட் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இயக்கி வருகின்றன. கோயம்புத்தூர் பகுதி ஒரு தானியங்கிகளின் தொகுப்பாக வளர்ந்து வருகிறது.

    சரக்கு வாகனம் மற்றும் பேருந்துக் கட்டுமானத் தொழில் தொகுப்புகள்#

    தமிழகத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு பகுதிகள் சரக்குந்து வாகன முழுப்பாகக் கட்டமைப்பிற்கான தொழிற்சாலைகளுக்குப்

    பெயர் பெற்ற இடங்களாகும். 50க்கும் மேற்பட்ட அலகுகளைக் கொண்டு கரூர் மற்றொரு முக்கிய மையமாகத் திகழ்கிறது. பல தொழில் முனைவோர்கள் பெரிய அளவிலான வாகனக் கட்டுமானத் துறையில் பணி புரிந்து தற்போது தங்கள் சொந்த அலகுகளை அமைக்க முன்வந்துள்ளனர்.

    நெசவுத் தொழில் தொகுப்புகள்#

    இந்தியாவில் மிகப்பெரிய நெசவுத் தொழில் துறைகளுக்கு தமிழ்நாடு தாயகமாக விளங்குகிறது. காலனித்துவ காலத்திலிருந்து பருத்தி நெசவுத் தொழில் வளர்ச்சியின் காரணமாக கோயம்புத்தூர் “தென்னிந்தியாவின் மான்செஸ்டர்” என அழைக்கப்படுகிறது. தற்போது நெசவு ஆலைகளில் பெரும்பாலானவைகோயம்புத்தூரைச் சுற்றியுள்ளன. நமது நாட்டின் மிகப் பெரிய பருத்தி நெசவு தொழில் உற்பத்தியில் தமிழ்நாடு பெரும்பங்கு வகிக்கிறது.

    நெசவுத் தொழிற்சாலை#

    ஈரோடு மற்றும் சேலம் பகுதியிலும் அதிகளவிலானமின்விசைத்தறி அலகுகள் இருப்பதால் மின்விசைத்தறித் தொழில் மிகவும் பரவலாக உள்ளது.

    திருப்பூரானது பின்னலாடை தயாரிக்கும் ஏராளமானநிறுவனங்களின் தொகுப்புகளுக்கு புகழ்பெற்ற இடமாகும். இது நாட்டின் பருத்தி பின்னலாடை ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 80% பங்கினைக் கொண்டுள்ளது. 1980களின் பிற்பகுதியிலிருந்து மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது. இது உள்நாட்டுச் சந்தையில் ஒரு மிகப்பெரிய உற்பத்தியாளராகத் திகழ்கிறது. இந்த மிகப்பெரிய வெற்றியின் காரணமாக உலகச் சந்தையில் உலகின் தெற்கு அரைக் கோளத்தில் ஒரு சக்தி வாய்ந்த்த தொகுப்பாக இந்த இடம் உள்ளது. ஆரம்பத்தில் உள்ளூர் தொழில்முனைவோரால் பெரும்பாலான நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய முன்னணிப் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் இங்கு தங்கள் தொழிற்சாலைகளை அமைத்துள்ளனர்.

    தா‡யˆ த‰Šநா‹Œ ெதாŽைற ெதா’க#

    காœƒர#

    மைர#

    (ƒவகாƒ)#

    வாகனக் கட்டுமானத் தொழிலமைப்பைத் தவிர மேசைத்துணி, திரைச்சீலைகள், படுக்கை விரிப்புகள் மற்றும் துண்டுகள் போன்ற வீட்டு அலங்காரப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய மையமாக கரூர் உள்ளது. மேலும், பவானி மற்றும் குமாரபாளையம் உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு தரை விரிப்புகளை உற்பத்தி செய்யும் முக்கிய மையங்களாகத் திகழ்கின்றன.

    இத்தகைய நவீன தொகுப்புகளைத் தவிர பட்டு மற்றும் கைத்தறிப் புடவைகளுக்கு பிரபலமானமதுரை மற்றும் காஞ்சிபுரம் போன்ற பாரம்பரிய கைவினைத் தொகுப்புகளும் உள்ளன. தோல் மற்றும் தோல் பொருள்களின் தொகுப்பு இந்தியாவின் 60% தோல் பதனிடும் உற்பத்தித்திறனையும் 38% தோலாடைகள் மற்றும் காலணிகள் அதனைச் சார்ந்த்த பொருள்களின் உற்பத்தியையும் தமிழ்நாடு பெற்றிருக்கிறது. வேலூர் அதனைச் சுற்றியுள்ள ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய நகரங்கள் நூற்றுக்கணக்கான தோல் உற்பத்தி மற்றும் பதனிடும் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது.

    தா‡யˆ, ‰ன” ம•– தகவ ெதாŽ —‹ப#

    ெசைன#

    ேதா ப‹ ஆைடக#

    தா‡யˆ ம•– ‰ன”#

    இ ம•– ைசத› ைசத› ம•– மœச ேபா’வர ம•– ேகாŽபžைண ƒெமž‹#

    ¡னலாைட ம•– ஆயத ஆைடக#

    ெகாகலக ம•– ைசயாŽக வாகன க‹ மான, ைசத›க#

    ஆயத ஆைடக ம•– தகவ ெதாŽ —‹ப#

    ேதா#

    ப‹டா¢க, £ெப‹Œக ம•– அ¤ƒ த#

    அளைவ இைல#

    தோல் பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதன்மை மாவட்டமாக வேலூர் திகழ்கிறது. சென்னையிலும் பல தோல் சார்ந்த்த உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழிற்சாலை நிறுவனங்கள் உள்ளன. திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளின் தொகுப்பு காணப்படுகிறது. தோல் உற்பத்தித் தொழிற்சாலையும் வேலைவாய்ப்பை அளிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சிடுதல் தொகுப்பு#

    தீப்பெட்டி உற்பத்தித் தொழிற்சாலையில் புகழ்பெற்று விளங்கும் சிவகாசி பகுதியானது தற்பொழுது பட்டாசு மற்றும் அச்சிடும் தொழிலில் நாட்டின் சிறந்த நகரமாகத் திகழ்கிறது. இந்தியாவில் 90% பட்டாசு உற்பத்தி, 80% தீப்பெட்டி உற்பத்தி மற்றும் 60% அச்சகப்பணிகளுக்கு இப்பகுதியையே சார்ந்துள்ளது. அச்சிடும் தொழிற்சாலை ஒவ்வொன்றும் அவற்றின் பணிகளில் தனித்துவம் பெற்று மேலோங்கி விளங்குகிறது. காலனித்துவ காலத்தில் தொடங்கப்பட்ட இத்தொழிலானது தற்பொழுது அதிகளவில் வேலை வாய்ப்பை அளிக்கிறது.

    பட்டாசு தொழிற்சாலை#

    மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் தொகுப்புகள்#

    1990களில் ஏற்பட்ட பொருளாதார சீர்திருத்திற்குப் பின் வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான், மோட்டோரோலா, சோனி எரிக்ஸன், சாம்சங் மற்றும் டெல் போன்ற வன்பொருள் மற்றும் மின்னணு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்

    குறிப்பிட்ட சில தகவல்தொழில்நுட்பப் பொருளாதார#

    மண்டலங்கள்#

    வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டாரப் பகுதிகளைத் தவிர, இரண்டுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, ஓசூர் மற்றும் சேலம் ஆகியவை தகவல் தொழிற்நுட்ப முதலீட்டிற்கான இடங்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

    இதனை எளிதாக்குவதற்காக ELCOT நிறுவனம் பின்வரும், எட்டு இடங்களில் ELCOSEZs

    (IT குறிப்பிட்ட பொருளாதார சிறப்பு மண்டலங்கள்)

    நிறுவியுள்ளது.

    • சென்னை - சோழிங்கநல்லூர்

    • கோயம்புத்தூர் - விளாங்குறிச்சி

    • மதுரை - இலந்தை குளம்

    • மதுரை - வடபாலஞ்சி, கிண்ணிமங்கலம்

    • திருச்சிராப்பள்ளி - நாவல்பட்டு

    • திருநெல்வேலி - கங்கைகொண்டான்

    • சேலம் - ஜாகீர் அம்மாபாளையம்

    • ஓசூர் – விஸ்வநாதபுரம் கைபேசி கருவிகள், மின்சுற்றுப் பலகை, நுகர்வோர் மின் சாதனப் பொருள் தயாரிப்பில் ஈடுபட ஆரம்பித்தன. இந்நிறுவனங்கள் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிறுவனங்களை நிறுவியுள்ளனர்.

    5.6 தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்#

    கொள்கைக் காரணிகளை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.

    கல்வி#

    திறமை வாய்ந்த்த மனித வளங்கள் தொழிற்சாலைக்குத் தேவைப்படுகிறது. நமது மாநிலமானது தொடக்கக் கல்விக்காக அதிகமான கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், படித்தவர்களின், எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அடிப்படை எண் கணித திறன்களை வளர்ப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இது நாட்டில் மிக அதிகப்படியான தொழில்நுட்ப வல்லுநர்களைத் தருவதிலும் பெயர் பெற்ற மாநிலமாகும். இந்தியாவில் அதிக எண்ணிகையில் பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழிற் பயிற்சி மையங்கள் போன்றவைகளின் புகலிடமாக தமிழ்நாடு உள்ளது.

    உள்கட்டமைப்பு#

    மாநிலங்களில் உள்ள சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் தொழில்மயமாதல் பரவுதலுக்கு மின்சார விநியோகம் சிறப்பான பங்கினை வகிக்கிறது. மின்சார விநியோகம் மட்டுமல்லாது, தமிழ்நாடானது மிகச் சிறந்த போக்குவரத்து உள்கட்டமைப்புக்குப் பெயர் போனது ஆகும். குறிப்பாக கிராமப்புறங்கள் சிறு சாலை வசதிகளால் அருகிலுள்ள சிறு நகரங்களுடனும், பெரு நகரங்களுடனும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் ஒருங்கிணைந்து கிராமப்புற மற்றும் நகர்புறங்களின் இணைப்பை எளிதாக்கியுள்ளது, சிறு உற்பத்தியாளர்களை சந்தைகளோடு இணைத்து அவர்களுக்கு நற்பலனைக் கொடுக்கிறது.

    தொழில்துறை ஊக்குவிப்பு#

    கல்வி, போக்குவரத்து மற்றும் ஆற்றல் வாய்ந்த்த உள்கட்டமைப்புகளுக்கு முதலீடு செய்வது மட்டுமல்லாமல், சிறந்த தொழிற்பிரிவுக்கான தொழிற்சாலை விரிவாக்கங்களை சிறந்த பகுதிகளில் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொருளாதார சீர்திருத்திற்கு பின் குறிப்பிட்ட காரணிகளானதானியங்கி, தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் ஆகியவை சிறந்த முறையில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளன. எனவே , பெரிய, சிறிய மற்றும் நடுத்தர பிரிவில் மேம்படுத்த உதவும் உள்கட்டமைப்புகளை நாடு முழுவதும் பல இடங்களில் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை அரசு நிறுவியுள்ளது.

    தமிழகத்தில் தொழில் விரிவாக்கத்திற்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள்#

    தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT – State Industries Promotion Corporation of Tamil Nadu) 1971இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு. தொழிற் தோட்டங்களை அமைத்துள்ளது.

    தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம்#

    சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (Special Economic Zones-SEZs)#

    நாட்டில் ஏற்றுமதிக்கு இடையூறு இல்லாத சூழலை கருத்தில் கொண்டு சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதற்கான ஒரு கொள்கை ஏப்ரல் 2000ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

    அதன்படி, பின்வரும் இடங்களில் ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களை அரசு அமைத்துள்ளது.

    நாங்குநேரி SEZல் நோக்கு உற்பத்தி SEZ திருநெல்வேலி
    எண்ணூர் SEZஅனல் மின் திட்டம், வயலூர்
    கோயம்புத்தூர் SEZதகவல் தொழிற்நுட்பப் பூங்காக்கள்
    ஓசூர் SEZதானியங்கி பொறியியல், மின்னணுவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு
    பெரம்பலூர் SEZபல்நோக்கு உற்பத்தி SEZ
    வாகன தொழில் நகரம் (Auto city) SEZவாகன தொழில் நகரம்/ வாகன உதிரிப்பாகங்கள், திருவள்ளூர்
    இந்தியா-சிங்கப்பூர் SEZIT/ITEs, மின்னணு வன்பொருள், தளவாடங்கள் மற்றும் கிடங்குகள் - திருவள்ளூர் மாவட்டங்கள்
    உயிரி-மருந்துகள் SEZமருத்துவ ஆராய்ச்சி அமைப்பு, விஷக்கட்டுப்பாட்டு மையம், மைய மீள் உருவாக்க மருத்துவம், மருத்துவ ஆராய்ச்சி

    மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம் (Madras Export Processing Zone - MEPZ)#

    மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும். மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மண்டலங்களில் இதுவும் ஒன்றாகும். இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும் அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கும் 1984ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. MEPZ தலைமையகம் சென்னையை அடுத்த தாம்பரம் GST சாலையில் அமைந்துள்ளது.

    தமிழ்நாடு மாநில சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO – Tamil Nadu Small Industries Development Corporation) 1970இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறுதொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஓர் அரசு நிறுவனமாகும். சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழிற் நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் வழங்குகிறது.

    தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம் (1965) (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation) நம் மாநிலத்தில் தொழிற் பேட்டைகள் நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.

    தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (1949) (TIIC – Tamil Nadu Industrial Investment Corporation Ltd) புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் குறைந்த அளவிலானநிதி உதவியைச் செய்கிறது.

    தமிழ்நாடு சிறுதொழில் கழகம் வரையறுக்கப்பட்டது (1965) (TANSI Tamil Nadu Small Industries Corporation Ltd) சிறு நிறுவனங்களுக்காக நிறுவப்பட்ட முதல் தொழில்துறை நிறுவனமாகும்.

    தொழில்மயமாதலின் பிரச்சனைகள்#

    தமிழ்நாடு, நமது நாட்டின் சிறந்த தொழில்மயமான மாநிலமாக இருந்த போதிலும் சில சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. வேதிப்பொருள்கள், நெசவுத் துறை மற்றும் தோல் தொகுப்புகள் மூலம் வரும் திரவக் கழிவுகள் நமது சுகாதாரத்தை கெடுக்கிறது. இந்த் திரவக் கழிவுகள் சேரும் நீர் நிலைகளை மட்டுமல்லாமல் அதையொட்டியுள்ள விவசாய நிறுவனங்களையும் மாசுபடுத்துகிறது. உலகளாவிய அளவில் போட்டி போடுவதற்காக நவின தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதால் நிலையானவேலை வாய்ப்புக்களை குறைக்கிறது. சமீபகாலங்களில் பணியாளர்களின் திறன் குறைந்து, தற்காலிக பணியாளர்களின் பணியமர்த்தப்படுவது அதிகரிக்கிறது.

    ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் ( ஜனவரி 16, 2016)#

    ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் என்பது இந்திய அரசின் ஒரு முன் முயற்சித் திட்டமாகும். இதன் முதன்மையானநோக்கம் தொழில் தொடங்குவதற்கான தொடக்க முயற்சிகளை ஏற்படுத்துதல், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் வளங்களை உருவாக்குதல் ஆகும்.

    ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் (ஏப்ரல் 5, 2016)#

    இத்திட்டத்தின் மூலம் பட்டியலின அல்லது பழங்குடியின கடன் பெறுபவர் மற்றும் ஒரு பெண் கடன் பெறுபவர் கீரின்பீல்டு என்டர்பிரைசஸ் நிறுவனம் (Greenfield Enterprise) அமைப்பதற்காக குறைந்தபட்சம்  10 இலட்சம் முதல்  1 கோடி ரூபாய் வரை ஒரு வங்கிக் கிளைக்கு ஒருவர் என வங்கியில் கடன் பெறுவதை எளிதாக்குவதாகும்.

    பாடச்சுருக்கம்தொழில்துறை தொகுப்புகள் என்பது பொதுவான சந்தைகள் தொழில்நுட்பங்கள் மற்றும் திறன்களுக்கான தேவைகளைப் பகிர்ந்துகொள்ள , வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதியில் உள்ள நிறுவனங்களின் தொகுப்புகளாகும். தொழில் தொகுப்பு தோன்றுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. ஒரு சில தொழில் தொகுப்புகள் தோன்றிய இடங்களில் கைவினைஞர்கள் குடியேறி நெடுங்காலமாக அங்கு தங்கி இருந்தாகவும் வரலாறு கூறுகிறது. கோயம்புத்தூர் பகுதியில் ஜவுளி இயந்திரங்கள் மற்றும் மின்சார மோட்டார்கள் மற்றும் நிலத்தடி நீரை உறிஞ்சுவதற்கான குழாய்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் பன்முகத் தன்மையின் வளர்ச்சியைக் கண்டது. சென்னை பெரிய அளவிலான வாகனத் தொழில்துறைத் தளமாக இருப்பதால் “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுகிறது.

    5.7 தொழில் முனைவோ� ோர்#

    ஒரு “தொழில் முனைவோர்” என்பவர் புதிய சிந்தனைகளுக்கும், வணிக செயல்முறைகளுக்கும் புத்தாக்கம் புனைபவர் ஆவார். இவர்களிடம் சிறந்த நிருவாகத் திறன்கள், வலிமையான குழுவை அமைக்கும் திறமைகளும் மற்றும் தேவையானதலைமைக்கான பண்புகளும் இருக்கும்.

    தொழில் முனைவு#

    தொழில் முனைவோர் தங்கள் தொழிலை பெருக்குவதற்கான செயல்முறைகளே தொழில் முனைவு எனப்படும். இவை ஒன்றை உருவாக்குவதற்கும் பெரிதுபடுத்துவதற்குமானதிறன் ஆகும். தொழில் முனைவோ� ோரின் பங்குநாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் தொழில் முனைவோரின் பங்கு மிக முக்கிய மானதாகும். 1. தொழில் முனைவோர் கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் தொழிற்சாலைகளை தொடங்கி, நாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலவும் வட்டார ஏற்றதாழ்வுகளை நீக்குகிறார்கள். 2. இவர்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் தலா வருமானம் உயர்வதற்கு உதவி புரிகிறார்கள். 3. குடிமக்களின் அசையா சேமிப்புகள் மற்றும் நாட்டின் ஏற்றுமதி வியாபாரம் மூலமாக மூலதனத்தைச் செயல்பட வைக்கிறார்கள். 4. தொழில்முனைவோர் கைவினைஞர்கள், தொழில்நுட்பத் தகுதி வாய்ந்த்த நபர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு பெரிய அளவிலானவேலைவாய்ப்பை வழங்குகிறார்கள். புதுமைகளைப் புகுத்துவதின் மூலம் இலாபத்தினை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். 5. தொழில்முனைவோர், குறைந்த விலையில் சிறந்த தரமான பொருள்களைப் பெற மக்களுக்கு உதவுகின்றனர், இதன் விளைவாக அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.

    கலைச் சொற்கள்#

    திரட்சிகள்agglomerationsa mass or collection of things
    தொழில் உற்பத்தி ெதாகுப்புகள்Industrial ClustersRelating to or characterised by industry.
    தோற்றம்Emergencethe process of coming into existence
    பரவல்diffusionthe spreading of something more widely
    கைவினை சார்ந்தArtisanalrelating to or characteristic of an artisan

    பயிற்சி#

    II கோடிட்ட இடங்களை நிரப்புக#

    1. நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் தமிழ்நாட்டில் மாவட்டத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

    2. சிறப்புப் பொருளாதார மண்டலக் கொள்கைகள் ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

    III தவறான ஒன்றினை தெரிவு செய்க#

    1. பின்வருவனவற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் இல்லாத பகுதி எது?

    அ) ராணிப்பேட்டை ஆ) தருமபுரி இ) ஆம்பூர் ஈ) வாணியம்பாடி

    1. பின்வருவனவற்றில் எது தொழில்துறை வளர்ச்சி நிறுவனம் அல்ல?

    அ) TIDCO ஆ) SIDCO இ) MEPG ஈ) SIPCOT

    V கீழ்க்காணும் வினாக்களுக்கு குறுகிய விடையளி

    1. வேளாண்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?

    2. தொழில்துறை தொகுப்பு என்றால் என்ன ?

    3. தொழில் தொகுப்புகள் உருவாவதற்கான வழிகள் யாவை ?.

    4. தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்துறை வளர்ச்சி மேம்பாட்டு நிறுவனங்களைக் குறிப்பிடுக.

    5. தமிழ்நாட்டில் தொழில்மயமாதலின் தற்போது சிக்கல்கள் யாவை ?.

    6. தொழில் முனைவோர் என்பவர் யாவர்?

    7. தொழில் முனைவு என்றால் என்ன ?

    VI கீழ்க்காணும் வினாக்களுக்கு விரிவான விடையளி

    1. வெற்றிகரமான தொழில்துறை தொகுப்புகளின் முக்கியப் பண்புகள் யாவை ?

    2. தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.

    3. தொழில் முனைவோரின் பங்கினைப் பற்றி விளக்குக.

    VII களஆய்வு#

    1. இணைய வழி ஆராய்ச்சியின் அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு தொழில் தொகுப்பினை தேர்ந்தெடுத்து அதனைப் பற்றிய குறிப்புகளை எழுதுக.

    VIII செய்முறைகள் மற்றும் செயல்பாடு#

    1. உங்கள் கூர்ந்து நோக்குதலின் அடிப்படையில் உங்கள் பள்ளி / வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு தொழில் தொகுப்பினை அல்லது ஒரு நிறுவனத்தைப் பற்றி ஒரு குறிப்பை எழுதுக.

    இணையச் செயல்பாடு#

    படி – 1 URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி#

    இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க#

    படி – 2 மெனுவின் இடது பக்கத்தில் உள்ள ’ Industrial area’ என்பதை சொடுக்கவும்#

    படி – 3 தோன்றும் வரைபடத்தில் ஒவ்வொன்றாக தேர்ந்தெடுத்து அதற்கான விளக்கத்தைப் பார்க்கவும் உரலி:

    https://portal.sipcot.in/pages/sipcotmap

    IX வாழ்க்கைத் திறன்கள்#

    1. ஆசிரியரும் மாணவர்களும் தொழில்முனைவோர் மற்றும் அவர்களின் செயல்பாடுகள் பற்றி விவாதித்து, ‘நீங்கள் ஒரு தொழில் முனைவோராக இருந்தால்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுங்கள்.

    இணையதள வளங்கள்#

    1. www.tn.gov.in

    2. www.msmedi-chennai.gov.in

    3. www.data.gov.in

    கூடுதல் கற்றல் வளங்கள்#

    இவை பாடநூலுக்கு துணையான வெளித்தள வளங்கள். மூலப் பாடநூலின் உரையும் புள்ளிவிவரங்களும் மேலே தனியாக உள்ளன.

    இணைப்புகள் சோதிக்கப்பட்ட நாட்கள்: 12–13 அக்டோபர் 2026. காணொலிகளின் தலைப்பும் வெளியீட்டாளரும் தேடல் பதிவுகளில் உறுதிப்படுத்தப்பட்டன; காணொலி இயக்கம் முழுமையாகச் சோதிக்கப்படவில்லை. வெளித்தளப் பயிற்சிகளின் விடைகள் பாடநூலின் அதிகாரப்பூர்வ விடைகளாகக் கருதப்படவில்லை.

    காணொலிகள்#

    இணையச் செயல்பாடுகள்#

    தலைப்புவாரியான வளங்கள்#

    “பாடக் காணொலி” மற்றும் “பாடப் பயிற்சி” முழுப் பாடத்துக்கான வளங்கள். “காணொலி தேடல்” தனித்தலைப்புக்கான தேடல் இணைப்பு; குறிப்பிட்ட காணொலி உறுதிப்படுத்தப்பட்டதாக அது குறிக்காது.

    பாடத் தலைப்புகாணொலிசெயல்பாடு
    5.1 தொழில்மயமாதலின் முக்கியத்துவம்தலைப்புக் காணொலிபாடத்தின் செயல்பாடுகள்
    5.2 தொழிலகங்களின் வகைகள்தலைப்புக் காணொலிபாடத்தின் செயல்பாடுகள்
    5.3 தொழில் தொகுப்புகள் (Industrial Clusters)தலைப்புக் காணொலிதலைப்புச் செயல்பாடு
    5.4 தமிழ்நாட்டின் தொழில்மயமாதலின்தலைப்புக் காணொலிபாடத்தின் செயல்பாடுகள்
    5.5 தமிழ்நாட்டின் முக்கியத் தொழில்துறை தொகுப்புகள் மற்றும் அவற்றின் சிறப்புகள்தலைப்புக் காணொலிதலைப்புச் செயல்பாடு
    5.6 தமிழ்நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்தலைப்புக் காணொலிதலைப்புச் செயல்பாடு
    5.7 தொழில் முனைவோ� ோர்தலைப்புக் காணொலிபாடத்தின் செயல்பாடுகள்

    முந்தைய உரலிகளின் சோதனை#

    முந்தைய உரலிசோதனை நிலைமாற்று வளம்
    https://portal.sipcot.in/pages/sipcotmapஅணுகல் உறுதிப்படுத்தப்படவில்லைமாற்று இணைப்பு

    அரசு பொதுத்தேர்வு வினாக்கள் (Board Examination Questions)#

    2 மதிப்பெண் வினாக்கள் (2 Marks)#

    2024#

    சென்னை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது ஏன் ?

    மாதிரி விடை மற்றும் தீர்வு

    சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ என அழைக்கப்படக் காரணம் அமெரிக்காவின் மோட்டார் வாகனத் தொழில் நகரமான டெட்ராய்ட் போன்று, சென்னையில் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தித் தொழிற்துறை சூழல் அமைந்துள்ளது. இந்தியாவின் வாகன ஏற்றுமதியில் சுமார் 60%-க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்டுள்ளதாலும், ஹூண்டாய், பி.எம்.டபிள்யூ, நிசான் போன்ற உலகப் புகழ்பெற்ற வாகன உற்பத்தி ஆலைகள் இங்கு அமைந்துள்ளதாலும் சென்னை ‘ஆசியாவின் டெட்ராய்ட்’ எனப்படுகிறது.


    2025#

    ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து நீவிர் அறிவது யாது ?

    மாதிரி விடை மற்றும் தீர்வு

    ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் (Startup India Scheme)

    1. நோக்கம்: இந்தியாவில் புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும், புதுமையான கண்டுபிடிப்புகளை ஆதரிக்கவும், பெரிய அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் 2016 ஜனவரியில் மத்திய அரசால் தொடங்கப்பட்ட திட்டமாகும்.
    2. நன்மைகள்: புதிய தொழில்களை எளிதாகப் பதிவு செய்தல், 3 ஆண்டுகளுக்கு வருமான வரி விலக்கு, காப்புரிமை பெறுவதில் சலுகை மற்றும் மூலதன நிதி உதவிகள் மூலம் இளைஞர்களைத் தொழில் முனைவோராக்குகிறது.

    2026#

    சிப்காட் (SIPCOT) - சிறு குறிப்பு வரைக.

    மாதிரி விடை மற்றும் தீர்வு

    சிப்காட் (SIPCOT) 1971-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழகத்தில் புதிய தொழிற்பேட்டைகள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (SEZs) உருவாக்கி, தொழில் முனைவோருக்கு நிலம், உள்கட்டமைப்பு மற்றும் நிதி உதவிகளை வழங்கி மாநிலத்தின் தொழில்மயமாக்கலை ஊக்குவிக்கிறது.


    Side Content