கார்பனைல் சேர்மங்களும் கார்பாக்சிலிக் அமிலங்களும் 12#

அடால்ப் வான் பேயர்
அடால்ப் வான் பேயர் என்பார் ஜெர்மன் நாட்டினைச் சேர்ந்த வேதியியல் ஆராய்ச்சி அறிஞர். இவர் 1880 ம் ஆண்டு இன்டிகோ சாயத்தினை தொகுத்து 1983 ல் அதன் வடிவ வாய்ப்பாட்டினையும் அளித்தார். இவர் வேதியியல் ஆராய்ச்சிக்கான நோபல் பரிசினை 1905ஆம் ஆண்டு பெற்றார். தாலீன்கள் நிறமிகள் யூரிக் அமில வழிப்பொருட்கள் பாலி அசிட்டிலின்கள் மற்றும் ஆக்சோனியம் உப்புகள் ஆகியவை இவரின் அரிய கண்டறிதல்கள் ஆகும். பார்பிட்டியுரேட்கள் என அறியப்படும் மனோவசிய மருந்துகளின் மூலமான பார்பிட்யூரிக் அமிலத்தினை இவர் யூரிக் அமிலத்திலிருந்து ஒரு வழிப்பொருளாக கண்டறிந்து அளித்தார்.
கற்றலின் நோக்கங்கள்
இப்பாடப்பகுதியை கற்றறிந்த பின் மாணவர்கள்,
- கார்பனைல் சேர்மங்களை தயாரிக்கும் முக்கிய முறைகளையும், அவைகளின் வேதிவினைகளையும் விவரித்தல்.
- கார்பனைல் சேர்மங்களின் கருக்கவர் பொருள் சேர்க்கை வினைகளின் வினைவழி முறைகளை விளக்குதல்.
- கார்பாசிலிக் அமிலங்கள் மற்றும் அவற்றின் பெறுதிகளின் தயாரித்தல் மற்றும் வேதிவினைகளை விவரித்தல்.
- ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் கார்பாசிலிக் அமிலங்களின் பயன்களை பட்டியலிடுதல்.
பாட அறிமுகம்:#
