மதிப்பீடு#
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.#
- கீழ்க்கண்ட வினையில் விளைபொருள் ‘A’ ன் சரியான அமைப்பு (NEET)


- அசிட்டோனிலிருந்து சயனோஹைட்ரின் உருவாகும் வினை பின்வருவனவற்றுள் எதற்கு சான்றாக உள்ளது?
அ) கருகவர் பதிலீட்டு வினை
ஆ) எலக்ட்ரான் கவர் பதிலீட்டு வினை
இ) எலக்ட்ரான் கவர் சேர்ப்பு வினை
ஈ) கருகவர் சேர்ப்பு வினை
- பின்வரும் ஒரு வினைக்காரணியுடன் அசிட்டோன் கருகவர் சேர்ப்பு வினையில் ஈடுபட்டு அதன் பின்னர் நீர்நீக்கமடைகிறது. அந்த வினைக்காரணி
அ) கிரிக்னார்டு வினைக்காரணி
ஆ)$\text{Sn} / \text{HCl}$
இ) அமிலக்கரைசலிலுள்ள ஹைட்ரசீன்
ஈ) ஹைட்ரோசயனிக் அமிலம்
- பின்வரும் வினையில்,
விளைபொருள் ‘X’ ஆனது ________ சோதனைக்கு தராது.
அ) டாலன்ஸ் சோதனை
ஆ) விக்டர் மேயர் சோதனை
இ) அயோடோஃபார்ம் சோதனை
ஈ) ஃபெலிங் கரைசல் சோதனை
அ) ஃபார்மால்டிஹைடு
ஆ) டை அசிட்டோன் அம்மோனியா
இ) ஹெக்ஸாமெத்திலீன் டெட்ராஅமீன்
ஈ) ஆக்சைம்
- பின்வரும் வினைவரிசையில் விளைபொருள் Z ஐ கண்டறிக.
அ) $(\text{CH}_3)_2\text{C(OH)}\text{C}_6\text{H}_5$
ஆ) $\text{CH}_3\text{CH(OH)}\text{C}_6\text{H}_5$
இ) $\text{CH}_3\text{CH(OH)}\text{CH}_2-\text{CH}_3$
7.கூற்று: 2,2-டைமெத்தில் புரோப்பனாயிக் அமிலம் HVZ வினையை தருவதில்லை. காரணம்:2,2-டைமெத்தில் புரோப்பனாயிக் அமிலம் $\alpha$-ஹைட்ரஜன் அணுவை கொண்டிருக்கவில்லை.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
- பின்வருவனவற்றுள் கொடுக்கப்பட்ட சேர்மங்களின் அமிலத்தன்மையின் அடிப்படையிலான சரியான வரிசை:
அ) $\text{FCH}_2\text{COOH} > \text{CH}_3\text{COOH} > \text{BrCH}_2\text{COOH} > \text{ClCH}_2\text{COOH}$
ஆ) $\text{FCH}_2\text{COOH} > \text{ClCH}_2\text{COOH} > \text{BrCH}_2\text{COOH} > \text{CH}_3\text{COOH}$
இ) $\text{CH}_3\text{COOH} > \text{ClCH}_2\text{COOH} > \text{FCH}_2\text{COOH} > \text{Br-CH}_2\text{COOH}$
ஈ) $\text{ClCH}_2\text{COOH} > \text{CH}_3\text{COOH} > \text{BrCH}_2\text{COOH} > \text{ICH}_2\text{COOH}$
9.
$$\text{பென்சாயிக் அமிலம்} \xrightarrow[\text{ii) }\Delta]{\text{i) NH}_3} \text{A} \xrightarrow{\text{NaOBr}} \text{B} \xrightarrow{\text{NaNO}_2/\text{HCl}} \text{C, C என்பது}$$அ) அனிலினியம் குளோரைடு
ஆ) $o$-நைட்ரோ அனிலீன்
இ) பென்சீன் டையசோனியம் குளோரைடு
ஈ) $m$-நைட்ரோ பென்சாயிக் அமிலம்
இந்த வினையானது ________ என்று அழைக்கப்படுகிறது.
அ) பிங்கல்ஸ்டீன் வினை
ஆ) ஹேலோஃபார்ம் வினை
இ) ஹெல் – வோல்ஹார்ட்– ஜெலின்ஸ்கி வினை
ஈ) இவற்றில் ஏதுமில்லை
11.
$$\text{CH}_3\text{Br} \xrightarrow{\text{KCN}} (\text{A}) \xrightarrow{\text{H}_3\text{O}^+} (\text{B}) \xrightarrow{\text{PCl}_5} (\text{C}) \text{ விளைபொருள் (C) என்பது}$$அ) அசிட்டைல் குளோரைடு
ஆ) குளோரோ அசிட்டிக் அமிலம்
இ) $\alpha$-குளோரோ சயனோ எத்தனாயிக் அமிலம்
ஈ) இவற்றில் எதுவுமில்லை
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று டாலன்ஸ் வினைக்காரணியை ஒடுக்குகிறது?
அ) ஃபார்மிக் அமிலம்
ஆ) அசிட்டிக் அமிலம்
இ) பென்சோபீனோன்
ஈ) இவற்றில் எதுவுமில்லை


அ) பியூட்-3-ஈனாயிக்அமிலம்
ஆ) பியூட்-1-ஈன்-4-ஆயிக்அமிலம்
இ) பியூட்-2-ஈன்-1-ஆயிக்அமிலம்
ஈ) பியூட்-3-ஈன்-1-ஆயிக்அமிலம்

காரணம்: ஆல்டிஹைடு ($-\text{CHO}$) தொகுதியானது மெட்டா ஆற்றுப்படுத்தும் தொகுதியாகும்.
அ) கூற்று, காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி, ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல.
இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று விcontradictory/விகிதச்சிதைவு வினைக்கு எடுத்துக்காட்டாகும்?
அ) ஆல்டால் குறுக்கம்
ஆ) கான்னிசரோ வினை
இ) பென்சாயின் குறுக்கம்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
- பின்வருவனவற்றுள் எந்த ஒன்று 50% சோடியம் ஹைட்ராக்சைடு கரைசலுடன் வினைப்பட்டு ஆல்கஹாலையும், அமிலத்தையும் தருகிறது?
அ) பீனைல்மெத்தனல்
ஆ) எத்தனல்
இ) எத்தனால்
ஈ) மெத்தனால்
- அசிட்டால்டிஹைடு மற்றும் பென்சால்டிஹைடை வேறுபடுத்தியறிய பயன்படுத்தப்படும் வினைக்கரணி:
அ) டாலன்ஸ் வினைக்காரணி
ஆ) ஃபெலிங் கரைசல்
இ) 2,4 – டைநைட்ரோபீனைல் ஹைட்ரசீன்
ஈ) செமிகார்பசைடு
- பென்சால்டிஹைடு, அடர் $\text{NaOH}$ உடன் வினைப்பட்டு $\text{X}$ மற்றும் $\text{Y}$ எனும் இரண்டு விளைபொருள்களைத் தருகிறது. சேர்மம் $\text{X}$ ஆனது உலோக சோடியத்துடன் வினைப்பட்டு ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது எனில் $\text{X}$ மற்றும் $\text{Y}$ என்பவை முறையே:
அ) சோடியம்பென்சோயேட் மற்றும் பீனால்
ஆ) சோடியம் பென்சோயேட் மற்றும் பீனைல்மெத்தனால்
இ) பீனைல்மெத்தனால் மற்றும் சோடியம் பென்சோயேட்
ஈ) இவற்றில் ஏதுமில்லை
- பின்வரும் வினைகளில் எதில் புதிய கார்பன் – கார்பன் பிணைப்பு உருவாகவில்லை?
அ) ஆல்டால் குறுக்கம்
ஆ) பிரீடல் கிராஃப்ட் வினை
இ) கோல்ப் வினை
ஈ) உல்ஃப் கிஷ்னர் வினை
- (A) எனும் ஒரு ஆல்கீன் $\text{O}_3$ மற்றும் $\text{Zn - H}_2\text{O}$ உடன் வினைப்பட்டு புரோப்பனோன் மற்றும் எத்தனால் ஆகியவற்றை சம மோலார் அளவுகளில் உருவாக்குகிறது. ஆல்கீன் (A) உடன் $\text{HCl}$ ஐ சேர்க்கும்போது சேர்மம் (B) முதன்மையான விளைபொருளாக கிடைக்கிறது. விளைபொருள் (B) யின் அமைப்பு:

- ஒப்பிடத்தக்க மூலக்கூறு நிறைகள் கொண்ட ஆல்டிஹைடுகள், கீட்டோன்கள் மற்றும் ஆல்கஹால்களை ஒப்பிடும்போது கார்பாக்ஸிலிக் அமிலங்கள் அதிக கொதிநிலையைப் பெற்றுள்ளன. இதற்கு காரணம் (NEET):
அ) வான்கோயர்வால்ஸ் கவர்ச்சி விசைகளின் காரணமாக ஏற்படும் கார்பாக்ஸிலிக் அமில மூலக்கூறுகளின் கூட்டமைப்பு
ஆ) கார்பாக்சிலேட் அயனி உருவாதல்
இ) ஒரே மூலக்கூறினுள் H-பிணைப்புகள் உருவாதல்
ஈ) மூலக்கூறுகளுக்கிடைப்பட்ட H-பிணைப்புகள் உருவாதல்
சுருக்கமாக விடையளி#
(அ) ஒரு ஆல்கஹால் (ஆ) ஒரு ஆல்கைல்ஹேலைடு (இ) ஒரு ஆல்கீன் ஆகியவற்றை தொடக்கச் சேர்மங்களாகக் கொண்டு புரோப்பனாயிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?
$\text{C}_2\text{H}_3\text{N}$ எனும் மூலக்கூறு வாய்பாடு கொண்ட சேர்மம் (A) ஆனது அமில நீர்பகுப்பில் (B) ஐ தருகிறது. (B) ஆனது தையோனைல்குளோரைடுடன் வினைப்பட்டு சேர்மம் (C) ஐ தருகிறது. பென்சீன், உலர் $\text{AlCl}_3$ முன்னிலையில் (C) உடன் வினைப்பட்டு சேர்மம் (D) ஐ தருகிறது. மேலும் (D) $\text{Zn/Hg}$ மற்றும் அடர் $\text{HCl}$ ஆல் ஒடுக்கமடைந்து சேர்மம் (E) ஐ தருகிறது. (A), (B), (C), (D) மற்றும் (E) ஆகியவற்றை கண்டறிக. சமன்பாடுகளை எழுதுக.
X மற்றும் Y ஆகியவற்றை கண்டறிக.
$$\text{CH}_3\text{COCH}_2\text{CH}_2\text{COOC}_2\text{H}_5 \xrightarrow{\text{CH}_3\text{MgBr}} \text{X} \xrightarrow{\text{H}_3\text{O}^+} \text{Y}$$A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

பின்வரும் வினையில் A, B, C மற்றும் D ஆகியவற்றை கண்டறிக
$$\text{எத்தனாயிக் அமிலம்} \xrightarrow{\text{SOCl}_2} \text{A} \xrightarrow{\text{Pd/BaSO}_4} \text{B} \xrightarrow{\text{NaOH}} \text{C} \xrightarrow{\Delta} \text{D}$$(A) எனும் ஆல்கீன் ஓசோனேற்றவினையில் புரோப்பனோன் மற்றும் ஒரு ஆல்டிஹைடு (B) ஆகியவற்றை தருகிறது. சேர்மம் (B) ஐ ஆக்சிஜனேற்றம் செய்யும்போது (C) கிடைக்கிறது. சேர்மம் (C) ஐ $\text{Br}_2/\text{P}$ உடன் வினைப்படுத்தும்போது சேர்மம் (D) கிடைக்கிறது. இத நீரார்பகுக்கும்போது (E) ஐ தருகிறது. புரோப்பனோனை $\text{HCN}$ உடன் வினைப்படுத்தி நீரார்பகுக்கும்போது சேர்மம் (E) உருவாகிறது. A, B, C, D மற்றும் E ஆகியவற்றை கண்டறிக.
பென்சால்டிஹைடை பின்வரும் சேர்மங்களாக எவ்வாறு மாற்றுவாய்? (i) பென்சோபீனோன் $\quad$ (ii) பென்சாயிக் அமிலம் (iii) $\alpha$-ஹைட்ராக்ஸி பினைல் அசிட்டிக் அமிலம்.
பின்வருவனவற்றின் மீது $\text{HCN}$ ன் செயல்பாடு யாது? (i) புரப்பனோன் $\quad$ (ii) 2,4-டைகுளோரோபென்சால்டிஹைடு. $\quad$ iii) எத்தனல்
C_5 H_10 O எனும் மூலக்கூறு வாய்பாடு கொண்ட (A) எனும் கார்பனைல் சேர்மமானது, சோடியம் பைசல்பைட்டுடன் படிக வீழ்படிவை தருகிறது. மேலும் அது அயோடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது. சேர்மம் (A) ஃபெலிங் கரைசலை ஒடுக்குவதில்லை. சேர்மம் (A) யை கண்டறிக.
அசிட்டோனுடன் பென்சால்டிஹைடின் ஆல்டால் குறுக்கவினையில் உருவாகும் முதன்மையான விளைபொருளின் அமைப்பு வாய்ப்பாட்டை எழுதுக.
பின்வரும் மாற்றங்கள் எவ்வாறு நிகழ்த்தப்படுகின்றன? (a) புரப்பனால் $\rightarrow$ பியூட்டனோன் (b) ஹெக்ஸ்-3-ஐன் $\rightarrow$ ஹெக்ஸன்-3-ஒன் (c) பீனைல்மெத்தனால் $\rightarrow$ பென்சாயிக் அமிலம் (d) பீனைல்மெத்தனால் $\rightarrow$ பென்சாயின்
பின்வரும் வினையை நிரப்புக.
- A, B மற்றும் C ஆகியவற்றை கண்டறிக.

கீட்டோன்களை ஆக்சிஜனேற்றம் செய்யும்போது கார்பன் - கார்பன் பிணைப்பு பிளக்கப்படுகிறது. வலிமையான ஆக்சிஜனேற்றியை கொண்டு 2,5 - டைமெத்தில்ஹெக்சன் - 3- ஒன் எனும் சேர்மத்தை ஆக்சிஜனேற்றம் செய்யும்போது கிடைக்கப்பெறும் விளைபொரு(ட்க)ளின் பெயர்(களை) எழுதுக
எவ்வாறு தயாரிப்பாய்?
i. அசிட்டிக் அமிலத்திலிருந்து அசிட்டிக் அமில நீரிலி
ii. மெத்தில் அசிட்டேட்டிலிருந்து எத்தில் அசிட்டேட்
iii. மெத்தில்சயனைடிலிருந்து அசிட்டமைடு
iv. எத்தனாலிலிருந்து லாக்டிக் அமிலம்
v. அசிட்டைல் குளோரைடிலிருந்து அசிட்டோபீனோன்
vi. சோடியம் அசிட்டேட்டிலிருந்து ஈத்தேன்
vii. டொலுயீனிலிருந்து பென்சாயிக் அமிலம்
viii. பென்சால்டிஹைடிலிருந்து மாலகைட் பச்சை
ix. பென்சால்டிஹைடிலிருந்து சின்னமிக் அமிலம்
x. ஈத்தைனிலிருந்து அசிட்டால்டிஹைடு
கார்பனைல் சேர்மங்கள்