12.14 கார்பாக்சிலிக் அமிலங்களின் செயல் வழிப்பொருட்கள்#
12.14 கார்பாக்சிலிக் அமில பெறுதிகள்
அமில குளோரைடுகள், அமைடுகள், எஸ்டர்கள் போன்றவை கார்பாக்சிலிக் அமில பெறுதிகள் என்றழைக்கப்படுகின்றன. ஏனெனில், அவை கார்பாக்சிலிக் அமிலத்தின் $-\text{OH}$ தொகுதியை பதிலீடு செய்த அணு அல்லது தொகுதியின் தன்மையில் மட்டுமே கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து வேறுபடுகின்றன.
| $-\text{OH}$ ஐ பதிலீடு செய்யும் தொகுதி | பெயர் | அமைப்பு | எடுத்துக்காட்டு |
|---|---|---|---|
| $-\text{Cl}$ | அமில குளோரைடு | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{Cl} \end{array} $$ | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \\ \text{அசிடடைல் குளோரைடு} \end{array} $$ |
| $-\text{NH}_2$ | அமில அமைடு | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{NH}_2 \end{array} $$ | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \\ \text{அசிட்டமைடு} \end{array} $$ |
| $-\text{OR}'$ | எஸ்டர் | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{OR}' \end{array} $$ | $$ \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OCH}_3 \\ \text{மெத்தில் அசிட்டேட்} \end{array} $$ |
| $-\text{OOCR}$ | அமில நீரிலி | $$ \begin{array}{ccc} \text{O} & & \text{O} \\ \parallel & & \parallel \\ \text{R}-\text{C} & -\text{O}-&\text{C}-\text{R} \end{array} $$ | $$\begin{array}{ccc}\text{O} & & \text{O} \\[-0.5ex]\parallel & & \parallel \\[-0.5ex]\text{CH}_3-\text{C} & \!-\text{O}-\! & \text{C}-\text{R} \\& \text{அசிட்டிக் அமில நீரிலி} & \end{array}$$ |
அமில பெறுதிகளின் ஒப்பு வினைத்திறன்
பெறுதிகளின் ஒப்பு வினைத்திறனானது பின்வரும் வரிசையில் அமைகிறது:
$$\begin{array}{ccccccc} \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R} - \text{C} - \text{Cl} \end{array} & > & \begin{array}{c} \text{O} \qquad \text{O} \\ \parallel \qquad \parallel \\ \text{R} - \text{C} - \text{O} - \text{C} - \text{R} \end{array} & > & \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R} - \text{C} - \text{OR}' \end{array} & > & \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R} - \text{C} - \text{NH}_2 \end{array} \end{array}$$i) விட்டுவிலகும் தொகுதியின் காரத்தன்மை, ii) உடனிசைவு விளைவு ஆகிய பண்புகளின் அடிப்படையில் மேற்காண் வினைத்திறன் வரிசையை விளக்க முடியும்.
(i) விட்டுவிலகும் தொகுதியின் காரத்தன்மை
வலிமை குறைந்த காரத் தொகுதிகள், சிறந்த விலகிச்செல்லும் தொகுதிகளாகச் செயல்படுகின்றன. எனவே, எளிதாக விலகிச் செல்லும் வலிமை குறைந்த காரத் தொகுதியை ($\text{L}$) கொண்ட அசைல் பெறுதிகள் எளிதாக பிணைப்பை முறித்துக்கொள்வதால் அவை வினைத்திறன் மிக்கவையாகும். விட்டுவிலகிச் செல்லும் தொகுதியின் காரத்தன்மையின் சரியான வரிசை $\text{H}_2\text{N}^- > \text{}^-\text{OR} > \text{RCOO}^- > \text{Cl}^-$. இதன் தலைகீழ் வரிசையில் அவற்றின் வினைத்திறன் அமைகிறது.
(ii) உடனிசைவு விளைவு
விட்டு விலகிச்செல்லும் தொகுதியின் எலக்ட்ரான் கவர்தன்மை குறையும்போது, அதன் உடனிசைவு நிலைப்புத்தன்மை கீழே காட்டியுள்ளவாறு அதிகரிக்கிறது.

இந்த விளைவின் காரணமாக மூலக்கூறு அதிக நிலைப்புத்தன்மையை பெறுவதால் அசைல் சேர்மத்தின் வினைத்திறன் குறைகிறது. விலகிச்செல்லும் தொகுதிகளின் எலக்ட்ரான் கவர்தன்மை பின்வரும் வரிசையில் அமைகிறது:
$$\text{Cl} > -\text{OCOR} > -\text{OR} > -\text{NH}_2$$எனவே, கருக்கவர் காரணிகளுடனான அமில பெறுதிகளின் வினைத்திறன் வரிசை: அமில ஹேலைடுகள் > அமில நீரிலிகள் > எஸ்டர்கள் > அமில அமைடுகள்
12.14.1 பெயரிடல்#
Here is the transcription of the Tamil tables from the provided images, formatted to match the English structure:
| சேர்மம் (பொதுப்பெயர், அமைப்பு வாய்ப்பாடு, IUPAC பெயர்) | IUPAC பெயர் | |||
|---|---|---|---|---|
| இட எண்ணுடன் முன்னொட்டு | மூலச் சொல் | முதன்மை பின்னொட்டு | இரண்டாம் பின்னொட்டு | |
| அசிட்டைல் குளோரைடு $$\begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{Cl} \\ \parallel \\ \text{O} \end{array}$$ எத்தனாயில்குளோரைடு | $-$ | எத் | ஏன் | ஆயில் குளோரைடு |
| புரப்பியோனைல் குளோரைடு $$\begin{array}{c} \text{C}_2\text{H}_5-\text{C}-\text{Cl} \\ \parallel \\ \text{O} \end{array}$$ புரப்பனாயில்குளோரைடு | $-$ | புரப் | ஏன் | ஆயில் குளோரைடு |
| பென்சாயில் குளோரைடு $$\begin{array}{c} \text{C}_6\text{H}_5-\text{C}-\text{Cl} \\ \parallel \\ \text{O} \end{array}$$ பென்சாயில்குளோரைடு | $-$ | பென்ச் | ஏன் | ஆயில் குளோரைடு |
| அசிட்டிக் நீரிலி $$\begin{array}{ccc} \text{CH}_3-\text{C} & -\text{O}- & \text{C}-\text{CH}_3 \\ \parallel & & \parallel \\ \text{O} & & \text{O} \end{array}$$ எத்தனாயிக் நீரிலி | $-$ | எத் | ஏன் | ஆயிக் நீரிலி |
| புரப்பியானிக் நீரிலி $$\begin{array}{ccc} \text{CH}_3-\text{CH}_2-\text{C} & -\text{O}- & \text{C}-\text{CH}_2-\text{CH}_3 \\ \parallel & & \parallel \\ \text{O} & & \text{O} \end{array}$$ புரப்பனாயிக் நீரிலி | $-$ | புரப் | ஏன் | ஆயிக் நீரிலி |
| பென்சாயிக் நீரிலி $$\begin{array}{ccc} \text{C}_6\text{H}_5-\text{C} & -\text{O}- & \text{C}-\text{C}_6\text{H}_5 \\ \parallel & & \parallel \\ \text{O} & & \text{O} \end{array}$$ பென்சாயிக் நீரிலி | $-$ | பென்ச் | ஆயிக் நீரிலி | |
| எஸ்டர்கள் | ||||
| மெத்தில் அசிட்டேட் $$\begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{O}-\text{CH}_3 \\ \parallel \\ \text{O} \end{array}$$ மெத்தில் எத்தனோயேட் | மெத்தில் | எத் | என் | ஓயேட் |
| எத்தில் அசிட்டேட் $$\begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{O}-\text{C}_2\text{H}_5 \\ \parallel \\ \text{O} \end{array}$$ எத்தில் எத்தனோயேட் | எத்தில் | எத் | என் | ஓயேட் |
| பீனைல் அசிட்டேட் $$\begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{O}-\text{C}_6\text{H}_5 \\ \parallel \\ \text{O} \end{array}$$ பீனைல் எத்தனோயேட் | பீனைல் | எத் | என் | ஓயேட் |
| அமில அமைடுகள் | ||||
| அசிட்டமைடு $$\begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \\ \parallel \\ \text{O} \end{array}$$ எத்தனமைடு | $-$ | எத் | என் | அமைடு |
| புரப்பியோனமைடு $$\begin{array}{c} \text{C}_2\text{H}_5-\text{C}-\text{NH}_2 \\ \parallel \\ \text{O} \end{array}$$ புரப்பனமைடு | $-$ | புரப் | என் | அமைடு |
| பென்சமைடு $$\begin{array}{c} \text{C}_6\text{H}_5-\text{C}-\text{NH}_2 \\ \parallel \\ \text{O} \end{array}$$ பென்சமைடு | $-$ | பென்ச் | $-$ | அமைடு |
12.14.2 அமில ஹலைடுகள்#
அமில குளோரைடுகளின் தயாரிப்பு முறைகள்:
அமில குளோரைடுகள் \( SOCl_2 \), \( PCl_5 \) அல்லது \( PCl_3 \) போன்ற குளோரினேற்றும் முகவர்களில் ஒன்றுடன் கார்பாக்சிலிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் தயாரிக்கப்படுகின்றன.
1) தயோனைல் குளோரைடுடன் (SOCl_2) வினை:
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OH} \end{array} + \text{SOCl}_2 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{HCl} + \text{SO}_2$$$$\text{அசிட்டிக் அமிலம் \qquad\qquad\qquad அசிட்டைல் குளோரைடு}$$இந்த முறை மற்றவற்றை விடச் சிறந்தது, ஏனெனில் உருவாகும் துணை விளைபொருள்கள் வாயுக்களாக வெளியேறி அமில குளோரைடைத் தூய நிலையில் விட்டுச் செல்கின்றன.
இயற் பண்புகள்:
காற்றில் வெளிக்காட்டப்படும் போது இவை நீருடன் வினைபுரிவதால், ஹைட்ரஜன் குளோரைடு வெளிரிய புகையை உருவாக்குகின்றன.
அவை நீரில் கரையாது, ஆனால் நீராற்பகுத்தலின் காரணமாக மெதுவாக கரையத் தொடங்குகிறது.
வேதிப் பண்புகள்:
அமில ஹேலைடுகள், வலிமைகுறைந்த கருகவர் காரணிகளான நீர், ஆல்கஹால்கள், அம்மோனியா மற்றும் அமீன்கள் போன்றவற்றுடன் வினைப்பட்டு அமிலம், எஸ்டர், அமைடு அல்லது பதிலீடு செய்யப்பட்ட அமைடுகளை உருவாக்குகின்றன.
1) நீராற்பகுப்பு: அசைல் ஹேலைடுகள் நீராற்பகுப்படைந்து அவற்றின் கார்பாக்சிலிக் அமிலங்களை உருவாக்குகின்றன
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{HOH} \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OH} \end{array} + \text{HCl}$$$$\text{அசிட்டைல் குளோரைடு \qquad\qquad\qquad அசிட்டிக் அமிலம்}$$2) ஆல்கஹால்களுடன் வினைப்பட்டு (ஆல்கஹால்பகுப்பு) எஸ்டர்களைத் தருகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{HOC}_2\text{H}_5 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OC}_2\text{H}_5 \end{array} + \text{HCl}$$$$\text{அசிட்டைல் குளோரைடு \qquad ஆல்கஹால் \qquad\qquad எத்தில் அசிட்டேட்}$$3) அம்மோனியாவுடன் வினைப்பட்டு (அம்மோனியாபகுப்பு) அமில அமைடுகளைத் தருகின்றன .
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{H}-\text{NH}_2 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{HCl}$$$$\text{அசிட்டைல் குளோரைடு \qquad அம்மோனியா \qquad\qquad அசிட்டமைடு}$$4) \( 1^\circ \) மற்றும் \( 2^\circ \) அமின்களுடனான வினை N-ஆல்க்கைல் அமைடுகளைத் தருகிறது.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{Cl} \end{array} + \text{H}-\text{NHR}' \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{NHR}' \end{array} + \text{HCl}$$$$\text{ஓரிணைய அமீன் \qquad\qquad\qquad N - அல்கைல் அமைடு}$$$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{Cl} \end{array} + \text{H}-\text{NR}'_2 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{R}-\text{C}-\text{NR}'_2 \end{array} + \text{HCl}$$$$\text{ஈரிணைய அமீன் \qquad\qquad\qquad N,N' - டை அல்கைல் அமைடு}$$(5) ஒடுக்கம்:
(a) இவற்றை, நச்சுப்படுத்தப்பட்ட பெல்லாடியம் வினைவேக மாற்றி முன்னிலையில் ஹைட்ரஜன் கொண்டு ஒடுக்கும்போது ஆல்டிஹைடுகளை தருகின்றன. இந்த வினையானது ரோசன்மன்ட் ஒடுக்கவினை என்றழைக்கப்படுகிறது. ஆல்டிஹைடுகளின் தயாரிப்பு முறைகள் எனும் தலைப்பின்கீழ் இந்த வினையை நாம் ஏற்கனவே கற்றறிந்தோம்.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{H}_2 \xrightarrow[2[\text{H}]]{\text{Pd} - \text{BaSO}_4} \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{H} \end{array} + \text{HCl}$$$$\text{அசிட்டைல் குளோரைடு \qquad\qquad\qquad\qquad அசிட்டால்டிஹைடு}$$(ஆ) $\text{LiAlH}_4$ கொண்டு ஒடுக்கும்போது ஓரிணைய ஆல்கஹால்களைத் தருகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + 4(\text{H}) \xrightarrow{\quad\text{LiAlH}_4\quad} \text{CH}_3-\text{CH}_2-\text{OH} + \text{HCl}$$$$\text{\qquad\qquad\qquad\qquad\qquad\qquad\qquad\qquad\qquad எத்தில் ஆல்கஹால்}$$12.14.3 அமில நீரிலி#
தயாரிப்பு முறைகள்:
1. கார்பாக்சிலிக் அமிலத்தை \( P_2O_5 \) உடன் சூடுபடுத்துதல்: கார்பாக்சிலிக் அமிலங்கள் \( P_2O_5 \) உடன் சூடுபடுத்தப்படும்போது நீர்நீக்கம் நடைபெற்று அமில நீரிலியை உருவாக்குகிறது என்பதை நாம் ஏற்கனவே கற்றுள்ளோம்.
2. அமில ஹலைடை கார்பாக்சிலிக் அமிலங்களின் உப்புடன் வினைப்படுத்துதல்: அமில குளோரைடுகள் கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புடன் சூடுபடுத்தப்படும்போது தொடர்புடைய நீரிலியைக் கொடுக்கின்றன.

வேதிப் பண்புகள்:
1. நீராற்பகுப்பு: அமில நீரிலிகள் நீரால் மெதுவாக நீராற்பகுப்பு செய்யப்பட்டு தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்களை உருவாக்குகின்றன.



4. \( PCl_5 \) உடனான வினை: அமில நீரிலி \( PCl_5 \) உடன் வினைபுரிந்து அசைல் குளோரைடுகளை உருவாக்குகிறது.
$$\begin{array}{ccc} \text{O} & & \text{O} \\ \parallel & & \parallel \\ \text{CH}_3-\text{C} & -\text{O}- & \text{C}-\text{CH}_3 \end{array} + \text{PCl}_5 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ 2\text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{POCl}_3$$$$\text{அசிட்டிக் நீரிலி \qquad\qquad\qquad\qquad\qquad அசிட்டைல் குளோரைடு}$$12.14.4 எஸ்டர்கள்#
தயாரிப்பு முறைகள்:
1. எஸ்டராக்கம்: ஆல்கஹால்களை, கனிம அமிலங்கள் முன்னிலையில் கார்பாக்சிலிக் அமிலங்களுடன் வினைப்படுத்தும்போது எஸ்டர்கள் உருவாகின்றன என்பதை நாம் முன்னரே கற்றறிந்தோம். அதிகளவு வினைப்பொருட்களை பயன்படுத்தியோ அல்லது வினைக்கலவையிலிருந்து நீரை நீக்கியோ இந்த வினையானது முடித்துவைக்கப்படுகிறது.
2. அமில குளோரைடு அல்லது அமில நீரிலியின் ஆல்கஹோலிசிஸ்: அமில குளோரைடுகள் அல்லது அமில நீரிலிகளை, ஆல்கஹாலுடன் வினைப்படுத்தும் போதும் எஸ்டர்கள் உருவாகின்றன.
இயற் பண்புகள்:
எஸ்டர்கள் நிறமற்ற திரவங்களாகவோ அல்லது திண்மங்களாகவோ உள்ளன. இவை தங்களுக்கே உரித்தான தனித்தன்மை வாய்ந்த பழ நறுமணத்தை பெற்றுள்ளன. சில குறிப்பிட்ட எஸ்டர்களின் நறுமணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
| S.No | எஸ்டர் | சுவை |
|---|---|---|
| 1 | அமைல் அசிடேட் | வாழைப்பழ மணம் |
| 2 | எத்தில் பியூட்ரேட் | அன்னாசிப்பழ மணம் |
| 3 | ஆக்டைல் அசிட்டேட் | ஆரஞ்சுபழ மணம் |
| 4 | ஐசோபியூட்டில் ஃபார்மேட் | ராஸ்பெர்ரி பழ மணம் |
| 5 | அமைல் பியூட்ரேட் | வாதுமைப் பழ மணம் |
வேதிப் பண்புகள்:
1. நீராற்பகுப்பு: எஸ்டர்கள் நீராற்பகுப்படைந்து ஆல்கஹால்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் உருவாகின்றன என்பதை நாம் ஏற்கனவே கற்றறிந்தோம்.
2. ஆல்கஹால் உடன் வினை ( டிரான்ஸ் எஸ்டராக்கல்): ஒரு ஆல்கஹாலின் எஸ்டரானது, கனிம அமிலங்களின் முன்னிலையில் மற்றொரு ஆல்கஹாலுடன் வினைப்பட்டு இரண்டாம் ஆல்கஹாலின் எஸ்டரை உருவாக்குகிறது. எஸ்டர்களுக்கிடையே நிகழும் இந்த ஆல்கஹால் பகுதி பரிமாற்றமானது, டிரான்ஸ் எஸ்டராக்கல் எனப்படுகிறது.

குறைந்தகார்பன்எண்ணிக்கைகொண்டஆல்கஹாலின்எஸ்டர்களிலிருந்துஉயர்ஆல்கஹால் எஸ்டர்களை தயாரிக்க இந்த வினை பயன்படுத்தப்படுகிறது.
3. அம்மோனியா (அம்மோனியா பகுத்தல்) உடன் வினை: எஸ்டர்கள், அம்மோனியா உடன் மெதுவாக வினைபுரிந்து அமைடுகளையும், ஆல்கஹால்களையும் உருவாக்குகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OC}_2\text{H}_5 \end{array} + \text{H}-\text{NH}_2 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{C}_2\text{H}_5\text{OH}$$$$\text{எத்தில் அசிட்டேட் \qquad\qquad\qquad\qquad\qquad அசிட்டமைடு \quad எத்தில் ஆல்கஹால்}$$4. கிளைசென் ஒடுக்கம்: குறைந்தபட்சம் ஒரு \( \alpha \)-ஹைட்ரஜன் அணுவைக் கொண்ட எஸ்டர்கள் சோடியம் எத்தாக்சைடு போன்ற வலிமையான காரத்தின் முன்னிலையில் தன்னொடுக்கத்திற்கு உட்பட்டு \( \beta \)-கீட்டோ எஸ்டரை உருவாக்குகின்றன.

5. \( PCl_5 \) உடனான வினை: எஸ்டர்கள் \( PCl_5 \) உடன்வினைப்பட்டு அசைல் மற்றும் ஆல்கைல் குளோரைடுகளின் கலவையை தருகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OC}_2\text{H}_5 \end{array} + \text{PCl}_5 \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{Cl} \end{array} + \text{C}_2\text{H}_5\text{Cl} + \text{POCl}_3$$$$\text{எத்தில் அசிட்டேட் \qquad\qquad\qquad அசிட்டைல்குளோரைடு \quad எத்தில் குளோரைடு}$$மதிப்பீடு - 3: அசைலேற்ற வினைகளை மேற்கொள்வதற்கு அசைல் குளோரைடை விட அமில நீரிலி ஏன் விரும்பப்படுகிறது?
12.14.5 அமில அமைடுகள்#
அமில அமைடுகள் கார்பாக்சிலிக் அமிலத்தின் வழிப்பொருட்களாகும், இதில் கார்பாக்சில் குழுவின் -OH பகுதி \( -NH_2 \) குழுவால் மாற்றப்பட்டுள்ளது. அமைடுகளின் பொதுவாய்பாடு பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
இப்போது, நாம் அசிடமைட்டின் வேதியியலைப் பற்றிய ஆய்வில் முக்கியமாகக் கவனம் செலுத்துவோம். \( R-CONH_2 \)
தயாரிப்பு முறைகள்:
1. அமில வழிப்பொருட்களின் அம்மோனோலிசிஸ்: அமில குளோரைடுகள் அல்லது அமில நீரிலிகளுடன் அம்மோனியாவின் வினையால் அமில அமைடுகள் தயாரிக்கப்படுகின்றன.

2) அம்மோனியம் கார்பாக்சிலேட்டுகளைச் சூடுபடுத்துதல்: கார்பாக்சிலிக் அமிலங்களின் அம்மோனியம் உப்புகள் (அம்மோனியம் கார்பாக்சிலேட்டுகள்) சூடுபடுத்தப்படும்போது, ஒரு நீர் மூலக்கூறை இழந்து அமைடுகளை உருவாக்குகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{O}^-\text{NH}_4^+ \end{array} \xrightarrow{\quad\Delta\quad} \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{H}_2\text{O}$$$$\text{அம்மோனியம் அசிட்டேட் \qquad\qquad\qquad அசிட்டமைடு}$$3) ஆல்க்கைல் சயனைடுகளின் (நைட்ரைல்கள்) பகுதி நீராற்பகுப்பு: குளிர் செறிவூட்டப்பட்ட HCl உடன் ஆல்க்கைல் சயனைடுகளின் பகுதி நீராற்பகுப்பு அமைடுகளைத் தருகிறது.
$$\text{CH}_3-\text{C}\equiv\text{N} \xrightarrow{\quad\text{அடர் HCl / }\text{H}_2\text{O / OH}^-\quad} \begin{array}{c} \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \\ \parallel \\ \text{O} \end{array}$$$$\text{மெத்தில் சயனைடு \qquad\qquad\qquad\qquad அசிட்டமைடு}$$வேதிப் பண்புகள்:
1. ஈரியல்புத் தன்மை:: அமைடு சேர்மங்கள் வலிமை குறைந்த அமிலம் மற்றும் வலிமை குறைந்த காரம் என இரண்டினைப் போலவும் நடந்து கொள்கின்றன, அதாவது ஈரியல்புத் தன்மையை பெற்றுள்ளன. இதனை பின்வரும் வினைகளின் வாயிலாக நிரூபிக்க இயலும். அசிட்டமைடு (காரத்தைப் போல), ஹைட்ரோ குளோரிக் அமிலத்துடன் வினைப்பட்டு உப்பைத் தருகிறது.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{HCl} \longrightarrow \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_3\text{ Cl}^- \end{array}$$$$\text{அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad அசிட்டமைடுஹைட்ரோகுளோரைடு}$$அசிட்டமைடு (அமிலத்தைப் போல), சோடியத்துடன் வினைப்பட்டு சோடியம் உப்பு மற்றும் ஹைட்ரஜன் வாயுவை வெளியேற்றுகிறது.
$$2\text{CH}_3-\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{C} \end{array}-\text{NH}_2 + 2\text{Na} \longrightarrow 2\text{CH}_3-\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{C} \end{array}-\text{NHNa} + \text{H}_2$$$$\text{\small அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad\qquad\qquad சோடியம் அசிட்டமைடு}$$2) நீராற்பகுத்தல்
அமில அல்லது காரக் கரைசல்களில் தொடர்ந்து வெப்பப்படுத்தும்போது அமைடுகள் நீராற்பகுப்படைகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{H}_2\text{O} \xrightarrow{\quad\text{dil HCl}\quad} \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{OH} \end{array} + \text{NH}_4\text{Cl}$$$$\text{\small அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad\qquad\qquad அசிட்டிக் அமிலம்}$$$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} \xrightarrow{\quad\text{NaOH}\quad} \begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{ONa} \end{array} + \text{NH}_3$$$$\text{\small அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad\qquad\qquad சோடியம் அசிட்டேட்}$$3) நீர்நீக்கம்
$\text{P}_2\text{O}_5$ போன்ற வலிமையான நீர்நீக்கும் காரணிகளுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது, அமைடுகள் நீர்நீக்கமடைந்து, சயனைடுகள் உருவாகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} \xrightarrow{\quad\Delta\quad}^{\text{P}_2\text{O}_5} \text{CH}_3-\text{C}\equiv\text{N} + \text{H}_2\text{O}$$4) ஹாஃப்மன் குறைப்பு வினை
காரங்களின் முன்னிலையில் அமைடுகள், புரோமினுடன் வினைப்பட்டு மூல அமைடு மூலக்கூறைவிட ஒரு கார்பன் குறைவாக உள்ள ஓரிணைய அமீனைத் தருகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + \text{Br}_2 + 4\text{KOH} \xrightarrow{\quad\Delta\quad} \text{CH}_3\text{NH}_2 \quad + \text{K}_2\text{CO}_3 + 2\text{KBr} + 2\text{H}_2\text{O}$$$$\text{\small அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad\qquad மெத்தில் அமீன்}$$5) ஒடுக்கம்#
அமைடுகளை, $\text{LiAlH}_4$ அல்லது சோடியம்- எத்தனால் கலவை கொண்டு ஒடுக்கும்போது அமீன்கள் உருவாகின்றன.
$$\begin{array}{c} \text{O} \\ \parallel \\ \text{CH}_3-\text{C}-\text{NH}_2 \end{array} + 4\,(\text{H}) \xrightarrow{\quad\text{LiAlH}_4\quad} \text{CH}_3-\text{CH}_2-\text{NH}_2 + \text{H}_2\text{O}$$$$\text{\small அசிட்டமைடு \qquad\qquad\qquad\qquad\qquad\qquad எத்தில் அமீன்}$$