12.6 ஆல்டிஹைடுகளுக்கான சோதனைகள்#
i) டோலன்ஸ் வினைப்பொருள் சோதனை#
டாலன்ஸ் வினைக்காரணி என்பது அம்மோனியாவில் கரைந்த வெள்ளி நைட்ரேட் கரைசலாகும். ஒரு ஆல்டிஹைடை டாலன்ஸ் வினைக்காரணியுடன் சேர்த்து வெப்பபடுத்தும்போது உலோக வெள்ளி வீழ்படிவாவதால் பளபளப்பான வெள்ளி ஆடி உருவாகிறது. இந்த வினையானது ஆல்டிஹைடுகளுக்கான வெள்ளி ஆடி சோதனை என்றழைக்கப்படுகிறது.
$$\begin{array}{ccc} \text{CH}_3\text{CHO} + 2\ [\text{Ag}(\text{NH}_3)_2]^+ + 3\text{OH}^- & \xrightarrow{\hspace{1.5cm}} & \text{CH}_3\text{COO}^- + 4\text{NH}_3 + 2\text{Ag} + 2\text{H}_2\text{O} \\ & & \text{\small வெள்ளி} \end{array}$$ii)ஃபெல்லிங் கரைசல் சோதனை
சமகனஅளவு கொண்ட ஃபெல்லிங் கரைசல் - A (நீரிய காப்பர் சல்பேட் கரைசல்) ஃபெல்லிங் கரைசல் - B (காரங்கலந்த சோடியம் பொட்டாசியம் டார்டோரேட் கரைசல்- ரோசெல்லே உப்பு) ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஃபெல்லிங் கரைசல் பெறப்படுகிறது. ஆல்டிஹைடை ஃபெல்லிங் கரைசலுடன் சேர்த்து வெப்பப்படுத்தும்போது அடர் நீல நிற கரைசலானது செந்நிற வீழ்படிவாக (குப்ரஸ் ஆக்சைடு) மாறுகிறது.
$$\begin{array}{ccc} \text{CH}_3\text{CHO} + 2\text{Cu}^{2+} + 5\text{OH}^- & \xrightarrow{\hspace{1.5cm}} & \text{CH}_3\text{COO}^- + \text{Cu}_2\text{O} \downarrow + 3\text{H}_2\text{O} \\ (\text{\small நீலம்}) & & (\text{\small சிவப்பு}) \end{array}$$iii) பெனடிக்ட் கரைசல் சோதனை#
பெனடிக்ட் கரைசல் என்பது \( CuSO_4 \) , சோடியம் சிட்ரேட் மற்றும் NaOH ஆகியவை கலந்த கலவையாகும். இதிலுள்ள \( Cu^{2+} \) அயனிகள் ஆல்டிஹைடுகளால் ஒடுக்கப்பட்டு செந்நிற குபரஸ் ஆக்சைடு வீழ்படிவாகிறது.
$$\begin{array}{ccc} \text{CH}_3\text{CHO} + 2\text{Cu}^{2+} + 5\text{OH}^- & \xrightarrow{\hspace{1.5cm}} & \text{CH}_3\text{COO}^- + \text{Cu}_2\text{O} \downarrow + 3\text{H}_2\text{O} \\ (\text{\small நீலம்}) & & (\text{\small சிவப்பு}) \end{array}$$iv) ஷிஃப்பின் வினைப்பொருள் சோதனை#
நீர்த்த ஆல்டிஹைடு கரைசல்களை ஷிஃப் வினைக்காரணியுடன் (ரோசனிலின் ஹைட்ரோ குளோரைடு நீரில் கரைக்கப்பட்டு,\( SO_2 \)அதன் சிவப்பு நிறம் நிறமிழக்கச் செய்யப்படுகிறது) சேர்க்கும்போது அதன் சிவப்பு நிறம் மீள உருவாகிறது. இந்த சோதனையானது ஆல்டிஹைடுகளுக்கான ஷிஃப் சோதனை என அறியப்படுகிறது. கீட்டோன்கள் இந்த சோதனையை தருவதில்லை. ஆனால், அசிட்டோன் மெதுவாக இந்த சோதனைக்கு உட்படுகிறது.