12.15 கார்பாக்சிலிக் அமிலங்கள் மற்றும் அதன் பெறுதிகளின் பயன்கள்#

    ஃபார்மிக் அமிலம்#

    i) தோல் பொருட்களை உலரவைக்கப் பயன்படுகிறது.

    ii) இரப்பர் பாலை கெட்டிப்படுத்தப் பயன்படுகிறது.

    iii) மருத்துவத் துறையில் கீழ்வாத நோயை குணப்படுத்தப் பயன்படுகிறது.

    iv) புரைதடுப்பானாகவும், பழச்சாறுகளை பதப்படுத்தவும் பயன்படுகிறது.

    அசிட்டிக் அமிலம்#

    i) சமையல் வினிகராகப் பயன்படுகிறது.

    ii) இரப்பர் பாலை கெட்டிப்படுத்தப் பயன்படுகிறது.

    iii) செல்லுலோஸ் அசிட்டேட் மற்றும் பாலிவினைல் அசிட்டேட் ஆகியவற்றை தயாரிக்கப் பயன்படுகிறது.

    பென்சாயிக் அமிலம்#

    i) தூய நிலை பென்சாயிக் அமிலம் அல்லது சோடியம் பென்சோயேட் ஆகியன உணவு பதப்படுத்திகளாகப் பயன்படுகின்றன.

    ii) மருத்துவத்துறையில் சிறுநீரக புரை தடுப்பானாகப் பயன்படுகிறது.

    iii) சாயங்கள் தயாரிப்பில் பயன்படுகிறது.

    அசிட்டைல் குளோரைடு#

    i) கரிம தொகுப்பு வினைகளில் அசிட்டைலேற்றக் காரணியாகப் பயன்படுகிறது.

    ii) கரிம சேர்மங்களிலுள்ள $-\text{OH}$, $-\text{NH}_2$ தொகுதிகளை கண்டறியவும், அளந்தறியவும் பயன்படுகிறது.

    அசிட்டிக் அமில நீரிலி#

    i) அசிட்டைலேற்றக் காரணியாகப் பயன்படுகிறது.

    ii) ஆஸ்பிரின் மற்றும் பினசிடின் போன்ற மருந்துகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

    iii) செல்லுலோஸ் அசிட்டேட் மற்றும் பாலி வினைல் அசிட்டேட் போன்ற பிளாஸ்டிக்குகள் தயாரிப்பில் பயன்படுகிறது.

    எத்தில் அசிட்டேட்#

    i) செயற்கை பழச்சாறுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

    ii) மெருகுப் பூச்சுகளுக்கு கரைப்பானாகப் பயன்படுகிறது.

    iii) எத்தில் அசிட்டோஅசிட்டேட் போன்ற கரிம தொகுப்பு காரணிகளை தயாரிக்கப் பயன்படுகிறது.

    Side Content