மருத்துவ அறிவியல், இயற்பியல் கொள்கைகளை பின்பற்றியே இயங்குகிறது. தொழில்நுட்பம் ஒருங்கிணைந்த நோயறிதல் மற்றும் சிகிச்சை (technology integrated diagnosis and treatment) முறைகளால் அளிக்கப்படுவதால் மருத்துவ கருவியமைப்பு மனித வாழ்நாளை அதிகரித்துள்ளது. அடிப்படை இயற்பியலை திறம்பட பயன்படுத்துவதால் எல்லா துறைகளிலும் இந்த நவீனமயமாக்கல் சாத்தியமாகிறது.
மருத்துவ துறையின் வளர்ச்சியானது கீழே காட்டியுள்ளவாறு இயற்பியலின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப உள்ளது. (தேர்வுக்கு உரியதன்று)#
| ஆண்டு | இயற்பியல் கண்டுபிடிப்பு (கண்டுபிடித்தவர்) | மருத்துவத்துறையில் பயன்படுத்தப்படும் நுட்பம் |
|---|---|---|
| 1895 | X- கதிர்கள் (வில்ஹெல்ம் கான்ராட் ரான்ட்ஜன்) | கதிரியக்கவியல் - X கதிர் படம் |
| 1896 மற்றும் 1898 | கதிரியக்கக் கோட்பாடு (ஆண்டனி ஹென்றி பெக்கரல், பியர் கியூரி மற்றும் மேரி கியூரி) | கதிரியக்க ஐசோடோப் படம் |
| 1934 | செயற்கைக் கதிரியக்கம் (ஜோலியட் மற்றும் ஐரீன் கியூரி) | கதிரியக்கப் படம் (Scintigraphy) |
| 1950 | மீயொலி | எக்கோ கிராஃப் |
| 1952 | அணுக்கரு காந்த ஒத்ததிர்வு (NMR) (பெலிக்சு பிளாக் மற்றும் எட்வர்டு பர்செல்) | காந்த ஒத்ததிர்வுப் படம் (MRI) |
| 1979 | X கதிர் கணிக்கும் டோமோகிராஃப் (கார்மாக் மற்றும் வர்ன்ஸ்பீட்டு) | கணிக்கப்பட்ட டோமோகிராஃப் (CT) |
| 1934 | பாசிட்ரான் உமிழ்வு | பாசிட்ரான் உமிழ்வு டோமோகிராஃப் (PET) |
| 1940-இல் | ஒளி இழை எண்டோஸ்கோப், உள் மருத்துவ உணர்விகள் | - |
| 1960 | லேசர் | அலைவரிசை குறி மற்றும் நோய்களைக் குணப்படுத்தல் |
| 1959 | நானோ தொழில்நுட்பம் | நானோ மருத்துவம், மருந்து விநியோகம் |
| 2005 | கண்டறியப்பட்ட இரட்டை மூல கணிக்கப்பட்ட டோமோகிராஃப் (DSCT) (ஜோர்ஜியா மற்றும் ஹைன்ஸ் ஓட்டோ) | இரட்டை மூல கணிக்கப்பட்ட டோமோகிராஃப் (DSCT) |
| 1998 | அணுக்கரு மருத்துவம் (டேவிட் டவுன்செண்டு, ரோனால்டு நட்) | இணைந்த தொழில்நுட்பங்கள் (PET-CT, PET-MR) |
மருத்துவ தொழில்நுட்பத்தின் சமீபத்திய வளர்ச்சியானது பின்வரும் துறைகளை உள்ளடக்கியது.#
- மெய்நிகர் உண்மை (Virtual reality)
- துல்லிய மருத்துவம் (Precision medicine)
- சுகாதார அணிகலன்கள் (Health wearables)
- செயற்கை உறுப்புகள் (Artificial organs)
- முப்பரிமாண (3D) அச்சிடல் (3D printing)
- கம்பியிலா மூளை உணர்விகள் (Wireless brain sensors)
- ரோபோடிக் அறுவை சிகிச்சை (Robotic surgery)
- மீத்திறன் உள் இழுப்பான்கள் (Smart inhalers)
மெய்நிகர் உண்மை
மருத்துவ மெய்நிகர் உண்மையானது மூளை வலியை செயலாக்குவதை நிறுத்தவும் மற்றும் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் வேதனையைக் குணப்படுத்தவும் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர்கள் 3D மாதிரிகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சையை திட்டமிடுவதன் மூலம் மெய்நிகர் உண்மை அறுவை சிகிச்சைகளை மேம்படுத்தியுள்ளது. அது மன இறுக்கம், நினைவு இழப்பு மற்றும் மனநோயை குணப்படுத்த உதவுகிறது.
துல்லிய மருத்துவம்
துல்லிய மருத்துவம் என்பது தனித்தனியான மரபணு மாறுபாடுகள், சுற்றுச்சூழல் மற்றும் ஒவ்வொரு நபரின் வாழ்க்கை முறை ஆகியவற்றை கணக்கில் கொண்ட நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கான ஒரு வளர்ந்து வரும் அணுகுமுறை ஆகும். இந்த மருத்துவ மாதிரியில் ஒவ்வொரு தனி நோயாளிக்கும் அவரது மருத்துவ முடிவுகள் அடிப்படையில் அளிக்கப்படும் சிகிச்சைகள், தொடர் சிகிச்சைகள் நிர்ணயிக்கப்படுகின்றது. அவருக்கென்று வடிவமைக்கப்பட்ட கருவிகளைக் கொண்டும் மருத்துவ சேவையை தனிப்பயன் ஆக்க இயலும்.
சுகாதார அணிகலன்கள்
ஒரு சுகாதார அணிகலன் என்பது அணிந்திருப்பவரின் முக்கிய அறிகுறிகள், அல்லது சுகாதார மற்றும் உடல் தகுதி தொடர்பான தரவு, இருப்பிடம் ஆகியவற்றை கண்காணிக்க உதவும் ஒரு கருவி ஆகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் பெரும் தரவுடன் கூடிய மருத்துவ அணிகலன்கள், நோய்த்தல், சிகிச்சை, நோயாளி கண்காணிப்பு மற்றும் நோய்தடுப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தக்கூடிய மருத்துவசேவைக்கு ஒரு கூட்டப்பட்ட மதிப்பை அளிக்கின்றன.
குறிப்பு: பெரும் தரவு: மிகவும் அதிக தரவு தொகுப்புகள் கணினி வழியாக பகுப்பாய்வு செய்யப்பட்ட மாதிரி வகைகள், போக்குகள், மற்றும் தொடர்புகள், குறிப்பாக மனித நடத்தை மற்றும் இடைவினைகளை வெளிப்படுத்துகின்றன.
செயற்கை உறுப்புகள்
ஒரு செயற்கை உறுப்பு என்பது மனிதனுக்குள் பொருந்தப்பட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு வடிவமைக்கப்பட்ட கருவி அல்லது திசு ஆகும். அதனை உயிருள்ள திசுவுடன் இணைக்கவோ அல்லது மனித உடல் உறுப்பை மாற்றவோ பயன்படுத்தப்படுகிறது. அது மனித உறுப்புகளின் குறிப்பிட்ட செயல்பாட்டை அல்லது செயல்பாடுகளை இரட்டிப்பாக்கி அல்லது அதிகப்படுத்தி, நோயாளி இயன்றவரை விரைவாக இயல்பு வாழ்க்கைக்கு திருப்பும் வகையில் செயல்படுகிறது.
முப்பரிமாண (3D) அச்சிடல்
கால் மருத்துவம், பல் மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்ற மருத்துவ துறைகளில் மருத்துவர்களுக்கு பெருவழி செய்ய 3D அச்சிடல் அமைப்புகள் மற்றும் பொருள்கள் உதவுகின்றன.
கம்பியிலா மூளை உணர்விகள்
கம்பியிலா மூளை உணர்விகள் மருத்துவ ஓட்டத்தில் உள்ள அதிர்வு மற்றும் வெப்பநிலையை கண்காணிக்கின்றன. மேலும் அவை உடனடியாக உட்கொள்ளப்படுகின்றன. எனவே இந்த கருவிகளை அறுவை சிகிச்சை தேவையில்லை.
ரோபோடிக் அறுவை சிகிச்சை
ரோபோடிக் அறுவை சிகிச்சை ரோபோட் அமைப்புகளால் செய்யப்படும் ஒரு வகை அறுவை சிகிச்சை செயல்முறை ஆகும். ரோபோட் உதவியுடன் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை ஏற்கனவே உள்ள குறைந்த அளவான துளையிடும் அறுவை சிகிச்சை முறைகளில் உள்ள வரம்புகளைக் கடக்க உதவுகிறது. மேலும் இது அறுவை சிகிச்சை நிபுணர்கள் திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்யும் திறன்களையும் மேம்படுத்துகிறது.
மீத்திறன் உள் இழுப்பான்கள்
ஆஸ்துமாவிற்கு முக்கிய சிகிச்சை வாய் உள் இழுப்பான்கள் ஆகும். மீத்திறன் உள் இழுப்பான்கள் சுகாதார அமைப்புகள் மற்றும் நோயாளிகளை (health systems and patients) மனதில் கொண்டு அவர்கள் பெரும் பயனை அடையுமாறு வடிவமைக்கப்படுகின்றன. மீத்திறன் உள் இழுப்பான்கள் புளூடூத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள் இழுப்பான் பயன்பாட்டை கண்டறிந்து நோயாளிகளுக்கு அவர்களின் மருந்தை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைவூட்டுகிறது. மேலும் இது தொடர் கவனிப்புக்கு உதவ தரவுகளைச் சேகரிக்கிறது.